தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம்

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம்

2 mins read
a80bd5d9-673b-4a10-9487-4cced0b3b457
பட்டிமன்றத்துக்கு நடுவராக இருந்து வழி நடத்தினார் பட்டிமன்றப் புகழ் திரு ராஜா (நடுவில்). இரு அணிகளுக்கும் தலைமை வகித்த புலவர் திரு ராமலிங்கம் (இடது), திருமதி கவிதா ஜவஹர் (வலது) ஆகியோரும் உள்ளனர். படம்: தமிழ் பட்டிமன்றக் கலைக் கழகம் -

சிங்­கப்­பூ­ரின் தமிழ்ப் பட்­டி­மன்ற பேச்­சா­ளர்­கள், உலக அரங்­கில் பெரிய அள­வில் அறி­மு­க­மா­கும் வகை­யில், முதன் முறை­யாக சிங்­கப்­பூ­ரின் தமிழ்ப் பட்­டி­மன்­றக் கலைக் கழ­க­மும் இந்­தி­யா­வின் 'சன்' தொலைக்­காட்­சிப் புகழ் 'கல்­யாண மாலை' அமைப்­பும் சேர்ந்து தீபா­வளி சிறப்­புப் பட்­டி­மன்­றத்தை அரங்­கேற்­றி­ன.

இந்த நிகழ்ச்சி யூடி­யூப் கல்­யா­ண­மா­லை­யி­லும், தமிழ்ப் பட்­டி­மன்­றக் கலைக் கழ­கத்­தின் ஃபேஸ்புக் தளத்­தி­லும் இடம்­பெற்­றது. இது தமிழ்ப் பட்­டி­மன்­றக் கலைக் கழ­கத்­தின் 112வது நிகழ்ச்சி ­ஆகும். மெய்­மே­டை­யும் மெய் நிக­ரு­மாய்க் கைகோர்த்து, கொவிட்-19 காலத்­தி­லும், அதே விறு­வி­றுப்­பும், சுவை­யும் குறை­யாத வகை­யில், நிகழ்ச்சி வடி­வ­மைக்­கப்­பட்­டது.

தமிழ்ப் பட்டிமன்­றக் கலைக் கழ­கத்­தின் தலை­வர் திரு அரு­மைச்­சந்­தி­ரன் அனை­வ­ரை­யும் வர­வேற்­றார்.

உல­கெங்­கி­லும் கடந்த 3 நாட்­களில் 16,000 ரசி­கர்­கள் கண்­டு­களித்­தனர். "அடுத்­த­வர் வாழ்க்­கையை நாம் ஆராய்­வது பலமா? பல­வீ­னமா?" என்­பது தலைப்பு. சன்­டிவி பட்­டி­மன்­றப் புகழ் திரு ராஜாவை நடு­வ­ரா­கக் கொண்டு இம்­மா­தம் 7ஆம் தேதி தீபா­வ­ளியை ஒட்டி கல்­யா­ண­மாலை தளத்­தில் இந்த நிகழ்ச்சி ஒளி­ப­ரப்­பப்­பட்­டது.

'பல­வீ­னமே' என்ற அணி­யில் இந்­தி­யா­வி­லி­ருந்து புல­வர் திரு இரா­ம­லிங்­கம் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து முனை­வர் ராஜி ஸ்ரீநி­வா­சன், திரு முகம்­மது பிலால் ஆகி­யோ­ரும், 'பலமே' என்ற அணி­யில் இந்­தி­யா­வி­லி­ருந்து திரு­மதி கவிதா ஜவ­ஹர், சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து திரு­மதி கலைச்­செல்வி வைத்­ய­நா­தன், திரு­மதி எசக்கி செல்வி ஆகி­யோ­ரும் பேச்­சா­ளர்­க­ளாக கலந்­து­கொண்­ட­னர்.

கல்­யா­ண­மா­லை­யின் ஆணி­வே­ரா­கச் செயற்­படும் திரு­மதி மீரா நாக­ரா­ஜனின் வர­வேற்­பு­ரை­யு­டன் தொடங்­கிய பட்­டி­மன்­றம், நடு­வர் திரு ராஜா­வால் கல­க­லப்­பாக நடத்­திச் செல்­லப்­பட்­டது. பல­வீ­னமே என்ற அணி தொடங்­கிய விவா­தத்­தில் திரு பிலால், "நாம் என்ன காந்­தி­க­ளோடா வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றோம் பிறர் வாழ்வை ஆராய்ந்து நம்­மைப் பலப்­ப­டுத்­திக் கொள்ள," என்­றார். முனை­வர் ராஜி ஸ்ரீநி­வா­சன், தன்னை அறி­யத் தனக்­கொரு கேடில்லை என்ற திரு­மூ­லர் வழி நம்மை நாம் ஆராய மட்­டுமே வாழ்­வில் நேர­மி­ருக்­கிறது என்­றார்.

புல­வர் இரா­ம­லிங்­கம், "பிறரை ஆரா­யும்­போது எதிர்­மறை எண்­ணங்­கள் தாம் மன­தில் ஓங்­கு­கிறது. வாழ்க்­கையை வாழ நம்மை மட்­டுமே ஆராய வேண்­டும்," என்­றார்.

'பலம்' என்ற அணி­யின் திரு­மதி எசக்கி செல்வி, "வெற்றி பெற்று வாழ்ந்­த­வர்­கள் போட்ட பாதை­யில் நாம் செல்­வது எளிது. எனவே ஆராய வேண்­டும்," என்­றார். அதே அணி­யைச் சேர்ந்த திரு­மதி கலைச்­செல்வி, அனு­பவங்­க­ளின் தொகுப்­பு­தான் வாழ்க்கை என்று கண்­ண­தா­சன் வழி­யைச் சொன்­னார்.

திரு­மதி கவிதா ஜவ­ஹர் நமது தவ­று­க­ளைத் திருத்­திக் கொள்­

வ­தற்­குக்­கூட அடுத்­த­வர் வாழ்க்­கையை ஆராய்ந்­து­தான் புரிந்­து­கொள்ள வேண்டி இருக்­கிறது என்­றார்.

மெய்­மே­டை­யில் ஒளிப்­ப­தி­வான இந்த இரண்டு மணி­நேர நிகழ்ச்­சியை, ஏற்­பாடு செய்த தமிழ்ப் பட்­டி­மன்­றக் கலைக்­க­ழ­கம் அனை­வ­ரா­லும் பாராட்­டப்­பட்­டது. உல­கெங்­கி­லும் இலட்­சக்­க­ணக்­கான திரு­மணங்­களை நடத்தி வைத்­தி­ருக்­கும் கல்­யா­ண­மாலை திரு மோகன் நன்­றி­யுரை ஆற்ற நிகழ்ச்சி இனிதே முடி­வுற்­றது.