போதைப்பொருள் கடத்தியவர் வழக்கில் மலேசியாவுக்கு சிங்கப்பூர் பதில்

போதைப்பொருள் கடத்தியவர் வழக்கில் மலேசியாவுக்கு சிங்கப்பூர் பதில்

1 mins read
498a2798-7077-4360-9252-44c6b111cfd6
நாகேந்திரன், அறிவாற்றல் குறைபாடு உள்ளவர் என்பதைக் காரணம் காட்டி மரண தண்டனையை நிறுத்துமாறு மனித உரிமைக் குழுக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. படம்: இபிஏ -

போதைப்பொருள் கடத்தியதற்காக மரண தண்டனையை எதிர்நோக்கும் மலேசியரான நாகேந்திரன் கே.தர்மலிங்கத்தின் வழக்கு குறித்து பிரதமர் லீ சியன் லூங்கும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் மலேசிய சகாக்களிடம் பதிலளித்துள்ளனர்.

நாகேந்திரனுக்கு சட்டத்தின்கீழ் முழுமையான, உரிய நடைமுறை வழங்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளதாக வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 12) தெரிவித்தார்.

நாகேந்திரன் வழக்கில் பரிவு காட்டுமாறு பிரதமர் லீ சியங் லூங்கிடம் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேட்டுக்கொண்டுள்ளதாக மலேசிய ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இத்தகவலைத் தெரிவித்தார்.

நாகேந்திரனுக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை (நவம்பர் 10) மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

எனினும், கடந்த செவ்வாய்க்கிழமை அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, விசாரணை அனைத்தும் நிறைவுறும்வரை அவருக்கு மரண தண்டனையை நிறுத்திவைக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்