மீண்டும் பணியில் எஸ்ஐஏ, ஸ்கூட் விமானிகள்

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் ( எஸ்­ஐஏ) குழு­மத்­தின் ஏறக்­கு­றைய அனைத்து விமா­னி­களும் சிப்­பந்­தி­களும் மீண்­டும் பறக்­கத் தொடங்­கி­யுள்­ள­னர். விமா­னப் பய­ணத்­துக்கு மீண்­டும் புத்­து­யிர் அளிக்­கும் வகை­யில் எஸ்­ஐஏ விரை­வாக தனது செயற்­பாட்­டைத் துரி­தப்­ப­டுத்­து­கிறது.

"எஸ்­ஐஏ குழு­மத்­தின் 92% விமா­னி­களும் 86% சிப்­பந்­தி­களும் இப்­போது பறக்­கி­றார்­கள் என்று கூறி­னார்," குழு­மத்­தின் தலைமை நிர்­வாகி கோ சூன் ஃபோங். நேற்று நடை­பெற்ற நிறு­வ­னத்­தின் அரை­யாண்டு முடி­வு­க­ளுக்­கான செய்­தி­யா­ளர் கூட்­டத்­தின்­போது அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

எஸ்­ஐஏ குழு­மம் தற்­போது தொற்­று­நோய்க்கு முன்­னர் செயற்­பாட்­டில் சுமார் 37 விழுக்­காட்­டில் இயங்­கு­கிறது. மேலும், இது டிசம்­ப­ரில் 43 விழுக்­கா­டாக உய­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

16 நாடு­க­ளு­டன் தடுப்­பூசி போடப்­பட்ட பய­ணப் பாதை­களை (விடி­எல்) சிங்­கப்­பூர் அறி­வித்­த­தன் மூலம் விமா­னப் பய­ணம் மீண்டு வரு­வ­தற்­கான நம்­பிக்கை துளிர் விட்­டி­ருக்­கிறது.

செயல்­பா­டு­கள் பற்­றிய ஆகக் கடைசி தகவலறி­வைக் கட்­டிக்­காக்க பெரும்­பா­லான பணி­யா­ளர்­கள் ஒரு மாதத்­திற்கு குறைந்­த­பட்­சம் ஒரு விமா­னத்­தில் அனுப்­பப்­ப­டு­கி­றார்­கள். மொத்­தம் 135 எஸ்­ஐஏ மற்­றும் ஸ்கூட் விமா­னங்­கள் மீண்­டும் இயக்­கத்­தில் உள்­ளன.

எஸ்­ஐ­ஏ­யின் விமா­னச் சேவை­களில் பணி­யாற்­றும் சிப்­பந்­தி­களும் விமா­னி­களும் இப்­போது கொவிட்-19 க்கு எதி­ரான தடுப்­பூ­சியை முழு­மை­யாக போட்­டுள்­ள­னர் என்று திரு கோ கூறி­னார். ஸ்கூட்­டின் சிப்­பந்­தி­க­ளுக்­கும் விமா­னி­க­ளுக்­கும் டிசம்­பர் மாதத்­திற்­குள் முழு­மை­யாக தடுப்­பூசி போடப்­படும்.

இதற்­கி­டையே, விமா­னப் பய­ணத்­திற்­குத் திரும்­பாத சில சிப்­பந்­தி­களும் விமா­னி­களும் எஸ்­ஐஏ குழு­மத்­தின் பிற பகு­தி­க­ளுக்கு அனுப்­பப்­ப­டு­கி­றார்­கள் அல்­லது ஊதி­யம் இல்­லாத விருப்ப விடுப்­பில் வைக்­கப்­ப­டு­கி­றார்­கள். மற்­ற­வர்­கள் மருத்­து­வ­ம­னை­கள் போன்ற பிற நிறு­வ­னங்­க­ளுக்கு அனுப்­பப்­படு­கின்­றனர்.

"படிப்­ப­டி­யாக, அவர்­கள் திரும்பி வரு­வார்­கள் என்று நாங்­கள் எதிர்­பார்க்­கி­றோம். ஆனால் இந்த நேரத்­தில் அவர்­கள் எப்­போது பணிக்­குத் திரும்­பு­வார்­கள் என்று சொல்ல முடி­யாது, " என்று திரு கோ கூறி­னார்.

இதற்­கி­டையே, லண்­ட­னுக்­கு செல்­லும் பய­ணி­க­ளுக்கு அதிக விமா­னத் தேர்­வு­கள் இருக்­கும். மலி­வுக் கட்­டண விமா­ன­மான ஸ்கூட் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து லண்­ட­னுக்கு டிசம்­பர் 16ஆம் தேதி அன்று சேவை­யைத் தொடங்­கும்.

பேங்­காக் வழி­யாக லண்­ட­னின் கேட்­விக் விமான நிலை­யத்­திற்­கான விமா­னங்­கள் ஆரம்­பத்­தில் வாரத்­திற்கு மூன்று முறை என்று இரண்டு வாரங்­க­ளுக்கு மட்­டுமே செயல்­படும். அதன் பின்­னர் அடுத்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி அன்று மீண்­டும் தொடங்­கும்.

பேங்­காக்­கில் நிறுத்­தப்­படும் நேரம் உட்­பட, பய­ணம் நேரம் சுமார் 16½ மணி­நே­ரம் ஆகும் என்­றும் ஒரு வழி பய­ணச் சீட்­டு­க­ளின் விலை $434லிருந்து தொடங்­கும்.

300க்கும் மேற்­பட்ட பய­ணி­கள் அம­ரக்­கூ­டிய அக­ல­மான போயிங் 787 டிரீம்­லை­னர் விமா­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தாக ஸ்கூட் கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!