செய்திக்கொத்து

முழுமையாக தடுப்பூசி போட்ட நிலை: அரசாங்கம் மறுஆய்வு செய்யும்

சிங்கப்பூரில் வசிப்பவர்கள், அவர்கள் தங்கள் இரண்டாவது கொவிட்-19 தடுப்பூசி போட்ட பிறகு, "முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டதாக" கருதப்படும் காலம், கூடுதல் தரவு கிடைக்கும்போது மறுஆய்வு செய்யப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.

தற்போதைய விதிமுறைகளின்படி, கொவிட்-19 இரண்டாவது தடுப்பூசிக்குப் பிறகு, ஒரு நபரின் தடுப்பூசி நிலை ஓர் ஆண்டு மற்றும் 14 நாட்களுக்குப் பிறகு காலாவதியாகிறது.

கடந்த புதன்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸில் வெளியிடப் பட்ட வாசகர் கடிதத்திற்கு சுகாதார அமைச்சு பதிலளித்தது. அதில் தடுப்பூசி போடப்பட்டதாகக் கருதப்படும் காலம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது என்பதை அமைச்சு நேற்று முன்தினம் விளக்கியது. சிங்கப்பூர் மற்றும் வெளிநாடுகளில் கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கும் பாதுகாப்பு குறித்த ஆய்வுகளின் ஆதாரங்களைத் தொடர்ந்து மறுஆய்வு செய்வ தாக அமைச்சு தெரிவித்தது.

அமைச்சின் பொதுச் சுகாதாரக் குழுவின் மருத்துவ சேவைகளின் துணை இயக்குநர் டாக்டர் டெரிக் ஹெங் கூறினார், "இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருவதால், முன்னதாக விதிமுறைகளை இயற்றும்போது, நபர்களை அனுமதிக்க இடைக்காலமாக (ஓர் ஆண்டு) காலவரையறை வகுத்தோம். அவர்கள் தங்கள் முதலாவது தடுப்பூசியைப் போட்ட பிறகு தடுப்பூசி-வேறுபடுத்தப்பட்ட பாதுகாப்பான நிர்வாக நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப் படும்," என்றார்.

"எம்ஆர்என்ஏ இரண்டு தடுப்பூசிகள் கடுமையான நோய் களுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்கினாலும், தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறைந்துவிடும். எனவே, கொவிட்-19 நோய்த்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பை மேம் படுத்துவதற்கும், பரவலைக் குறைப்பதற்கும், தடுப்பூசி போடப்பட்ட தகுதியுடைய அனைத்து நபர்களும் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுமாறு சுகாதார அமைச்சு பரிந்துரைக் கிறது. இது கடுமையான நோய்க்கு எதிரான பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும்," என்று டாக்டர் ஹெங் கூறினார்.

169 சிறைக் கைதிகளுக்கு கொவிட்-19 தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

சிறைக் கைதிகள் 169 பேருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் சிறைத் துறை நேற்று முன்தினம் தெரிவித்தது. இந்த 169 பேரில் 116 பேர் சாங்கி சிறை வளாகத்தின் A1 பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது. நவம்பர் 6 முதல் 10 வரை நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த 116 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் மரண தண்டனை கைதிகளும் அடங்குவர்.

A1 பிரிவைச் சேர்ந்த 116 கைதிகளைத் தவிர, தொற்று உறுதி செய்யப்பட்ட மற்றவர்கள் சிறைகளுக்குள் நுழை வதற்கு முன்பு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிரித்து வைத்தல் நடவடிக்கையின்போது சிறைத் துறையால் கண்டறியப்பட்டவர்கள் அல்லது சிறைகளில் கடுமையான சுவாச நோய்த்தொற்று அறிகுறிகளுடன் நோய்வாய்ப்பட்ட கைதிகள்.

சமூகம் சார்ந்த திட்டங்களில் கைதிகளாக உள்ள 54 மேற்பார்வையாளர்களுக்கும் ஒன்பது சிறைத் துறை ஊழி யர்களுக்கும் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட் டது. அனைத்து கைதிகளும் ஊழியர்களும் குணமடைந்து வருகிறார்கள் என்றும் சிறைத் துறை கூறியது.

"தற்போது தொற்றால் எந்த ஊழியரும் அல்லது கைதி யும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றாலும், மூன்று மேற்பார்வையாளர்களுக்கு தற்போது கொவிட்-19 அறிகுறியாக இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது," என்றும் சிறைத் துறை தெரிவித்தது.

தேசிய சேவைக்கான பதிவு

தேசிய சேவை ஆள்சேர்ப்பு சட்டத்தின்படி, 1 அக்டோபர் 2004 முதல் 1 ஜனவரி 2005 வரை பிறந்த எல்லா ஆண் சிங்கப்பூர் குடிமகனும் சிங்கப்பூர் ஆண் நிரந்தரவாசியும், 17 நவம்பர் 2021 முதல் 7 டிசம்பர் 2021 வரை தேசிய சேவைக்குப் பதிந்துகொள்ள வேண்டும்.

அவர்கள் https://www.ns.sg எனும் இணையத் தளம் வழியாகவோ எண் 4, டெப்போ ரோட்டில் உள்ள மத்திய ஆள்பலத் தளத்தில் நேரடியாகவோ பதிந்துகொள்ளலாம். பதிவின்போது, அவர்கள் 7 ஜனவரி 2022 முதல் 11 பிப்ரவரி 2022 வரை ஏதாவது ஒரு தேதியைத் தங்கள் மருத்துவப் பரிசோதனைக்காக தேர்வு செய்ய வேண்டும். அந்தத் தேதி யில் அவர்கள் மத்திய ஆள்பலத் தளத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும்.

பதிவாளர்கள் தங்கள் தேசிய சேவைக்குப் பதிந்து கொண்ட தேதிக்கும் தேசிய சேவையைத் தொடங்கும் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்கள் கல்வியைத் தொடர முடிவெடுத்தால் அவர்கள் தங்கள் தேசிய சேவையை ஒத்திவைக்க விண்ணப்பிக்கலாம். அதை அவர்கள் https://www.ns.sg எனும் இணையத் தளம் வழியாகவோ எண் 4, டெப்போ ரோட்டில் உள்ள மத்திய ஆள்பலத் தளத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.

மேல் விவரங்களுக்கு 1800-3676767 என்ற எண்ணிலோ, contact@ns.sg எனும் மின்னஞ்சல் மூலமாகவோ, https://www.ns.sg எனும் இணையத் தளம் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!