சிங்கப்பூர் முழுவதும் உள்ள 167 சியர்ஸ், ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா கடைகளில் அடுத்த ஆண்டில் இருந்து நெகிழிப் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும்.
நெகிழிப் பைகளுக்கு சியர்ஸ் கடையில் 10 காசும் ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா கடையில் 20 காசும் தர வேண்டிஇருக்கும். நெகிழிப் பயன்பாட்டை மேலும் குறைக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக என்டியுசி ஃபேர்பிரைஸ் பேச்சாளர் தெரிவித்தார். இத்திட்டம் 2019ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டபோதும் இப்போது 24 கடைகளில் மட்டுமே நடப்பில் உள்ளது. ஃபேர்பிரைசின் 'நெகிழிப் பை மேலாண்மைத் திட்டம்' அறிமுகமானதில் இருந்து, 30 மில்லியன் நெகிழிப் பைகள் மிச்சப்படுத்தப்பட்டுள்ளன. பத்தில் ஏழு வாடிக்கையாளர்கள் தாங்களே சொந்தமாகப் பையை எடுத்துவர தயாராகவுள்ளனர்.