சிங்கப்பூரில் நேற்று முன்தின நில வரப்படி, 2,396 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. இது முன்னைய நாளின் 3,481 சம்பவங்களைவிட குறைவு என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மேலும் எட்டு பேர் தொற்றினால் மரணமடைந்துள்ளனர். அவர்கள் 74 வயதுக்கும் 100 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
இந்த மரணங்களையும் சேர்த்து சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றினால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 548க்கு உயர்ந்துள்ளது.
புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் 2,243 பேர் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்கள், 136 பேர் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் வசிப்பவர்கள். 17 பேர் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் திரும்பியவர்கள் என்று அமைச்சின் அறிக்கை கூறியது.
சமூகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட 370 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
சிங்கப்பூரில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 230,077க்கு உயர்ந்துள்ளது.