காடுகளின் அழிவை 2030க்குள் நிறுத்தும் உலக உறுதிமொழியில் சேர்ந்த சிங்கப்பூர்

2 mins read
8fa73500-7e9f-4ffd-a1a2-900b748bc1e1
தமிழக வனப்பகுதி. - படம்: ஊடகம்

வரும் 2030ஆம் ஆண்­டுக்­குள் காடு­களை அழிப்­பதை நிறுத்தி அவற்­றைத் திரும்ப உரு­வாக்­கு­வ­தை­யும் நிலம் பாழ்­ப­டு­வ­தைத் தடுத்து அவற்றை வள­மாக்­கு­வ­தை­யும் குறிக்­கோ­ளா­கக் கொண்ட உறு­தி­மொ­ழி­யில் சிங்­கப்­பூ­ரும் கையெ­ழுத்­திட்­டுள்­ளது.

இந்த உறுதிமொழியில் 130க்கும் அதி­க­மான உல­க­நா­டு­கள் கையெ­ழுத்­திட்­டுள்ளன. காடு­கள், நிலப் பய­னீடு தொடர்­பான கிளாஸ்கோ தலை­வர்­கள் உறு­தி­மொ­ழியை தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ வழி­ மொ­ழிந்­துள்­ள­தாக அமைச்சு நேற்று கூறி­யது.

கிளாஸ்கோ நக­ரில் நடை­பெற்று வரும் சிஒபி26 பரு­வ­நிலை மாநாடு நேற்று நிறை­வுற்ற நிலை­யில் அமைச்சு இதைத் தெரி­வித்­தது.

சிஒபி26க்கு தலைமை வகிக்­கும் பிரிட்­டன், கடந்த 2ஆம் தேதி உறுதி ­மொ­ழியை முன்­வைத்­தது. இது­வரை 130க்கும் அதி­க­மான நாடு­கள் இதில் கையெ­ழுத்­திட்­டுள்­ளன. இதன்வழி உல­கக் காடு­களில் 91% உறுதிமொழியில் அடங்­கு­கின்­றன.

"சிங்­கப்­பூர், தேசிய, மற்­றும் உல­க­ள­விய பரு­வ­நி­லைச் நட­வ­டிக்­கை­க­ளைச் செயல்படுத்த கடப்­பாடு கொண்­டுள்­ளது. காடு­களும் நிலப் ­ப­ரப்­பு­களில் உள்ள சுற்­றுச்­சூ­ழல் கட்­ட­மைப்­பு­களும் பரு­வ­நிலை மாற்­றத்­தின் பாதிப்­பைக் குறைப்­ப­தில் முக்­கிய பங்கை வகிக்­கின்­றன.

"இத­னால் நீடித்த நிலைத்­தன்­மை­யுள்ள வழி­களில் நிலம் பயன் ­ப­டுத்­தப்­ப­டு­வ­தை­யும் காடு­க­ளைப் பாது­காப்­ப­தை­யும் உறு­தி­செய்­வது முக்­கி­யம்," என்று தேசிய வளர்ச்சி அமைச்சு அதன் அறிக்­கை­யில் கூறி­யது.

உறு­தி­மொ­ழியை வழி­மொ­ழி­ வதன் மூலம், நகரை நீடித்த நிலைத்­தன்மை உள்ள வகை­யில் மேம் படுத்­த­வும் தீவில் செழிக்­கும் இயற்­கை­யைப் பாது­காக்­க­வும் தான் கொண்­டுள்ள கடப்­பாட்டை சிங்­கப்­பூர் மறு­உ­று­திப்­ப­டுத்­து­வ­தாக அமைச்சு நேற்று குறிப்­பிட்­டது.

நிலப் பயன்­பாட்­டைத் திட்­ட­மிடு வதில் சிங்­கப்­பூர் கொண்டுள்ள அணு­கு­மு­றை­யில் நீடித்த நிலைத்­தன்­மை­யும் பொறுப்­பான நிர்­வ­கித்­த­லும் முக்­கிய கோட்­பா­டு­கள் ஆகும் என்று திரு லீ கூறி­னார்.