சிங்கப்பூரின் கரையோரப் பகுதிகளில் பயங்கரவாத அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய கப்பல்களை அடையாளம் காண புதிய செயற்கை நுண்ணறிவு தரவு பகுப்பாய்வு முறை கைகொடுக்கும்.
'சிங்கப்பூர் மேரிடைம் கிரைசிஸ் சென்டர்' எனப்படும் கடல்துறை நெருக்கடிகளைக் கையாளும் மையம் இதனைப் பயன்படுத்தும். இது உள்ளூர், வெளிநாட்டு அரசாங்க மற்றும் வர்த்தக அமைப்புகளிலிருந்து கிடைக்கும் தகவல்களை உடனுக்குடன் பகுப்பாய்வு செய்யும். கப்பல் சிப்பந்திகளின் குற்றவியல் புதிவுகள் முதல் கப்ப லின் பயணப் பாதைவரை அனைத்தையும் ஆய்வு செய்து, மிரட்டலின் அளவைத் தீர்மானிக்கும். இதனு டன், கப்பல் குறித்த விவரங்களை யும் ஏனைய கடல்துறை பாதுகாப்பு அமைப்புகளுடன் உடனடியாகப் பகிர்ந்துகொள்ளும். இதன்மூலம் பாதுகாப்பு அமைப்புகள் தக்க நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
கப்பலைக் கைப்பற்றுதல், கடல்வழி போக்குவரத்தை மாற்றி விடுதல், கப்பலில் ஏற்படக்கூடிய தீயை அணைத்தல் அல்லது 2019ல் ரசாயனக் கப்பலில் நடந்ததைப் போல், சந்தேகத்திற்குரிய கப்பல் சிப்பந்திகள் கப்பலிலிருந்து தப்பி ஓடுவதைத் தடுத்தல் போன்ற பதில் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.
சிங்கப்பூர் குடியரசுக் கடற்படை, கடல்துறை துறைமுக ஆணையம், குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம், சிங்கப்பூர் சுங்கத்துறை, காவல் துறை, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஆகிய அமைப்புகளை இந்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் புதிய தரவு பகுப்பாய்வு முறையைச் செயல்படுத்தும்.
இந்த அமைப்புகள் இணைந்து நடத்திய பயிற்சியின் நிறைவில் நேற்று கலந்துகொண்ட மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன், "சிங்கப்பூர் உலகின் மிக முக்கிய கடல்வழிப் பாதைகளின் ஒன்றில் அமைந்துள்ளதால், நாம் அனைத்துவிதமான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்," என்று கூறினார்.