சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தவும் புதிய அல்லது மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகளையும் தீர்வுகளையும் உருவாக்கவும் சீமென்ஸ் நிறுவனம் உதவிக்கரம் நீட்டுகிறது.
ஜெர்மன் பன்னாட்டு நிறுவனமான சீமென்சின் விரிவாக்கம் செய்யப்பட்ட மேம்பட்ட தயாரிப்பு நிலையம் (ஏம்டிசி 2.0) நேற்று திறக்கப்பட்டது.
இது வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் ஆலோசனை, இணை உருவாக்கம், பரிசோதனை சேவைகளை வழங்கும். சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆய்வு, மேம்பாட்டுக்கான தளங்களையும் வளங்களையும் வழங்குவதுடன், 4.0 தொழில்துறையில் உள்ளூர் மற்றும் வட்டாரத் திறன்களை வளர்க்க உதவும் பயிற்சி வசதிளையும் பாடத்திட்டங்களையும் ஏம்டிசி, விரிவுபடுத்தியுள்ளது.
திறப்புவிழாவில் உரையாற்றிய வர்த்த தொழில் அமைச்சரான காம் கிம் இயோங், மேம்பட்ட உற்பத்தி சிங்கப்பூரின் முக்கிய முன்னுரிமை என்றும் குடியரசின் 2030 தயாரிப்பு உத்திபூர்வத் திட்டத்தில் சீமென்ஸ் மதிப்புமிக்க பங்காளி என்றார்.
முதல் சீமென்ஸ் அலுவலகம் 1908இல் சிங்கப்பூரில் நிறுவப்பட்டது. அதன் வட்டாரத் தலைமையகமாக விளங்கும் சிங்கப்பூரில் இன்று 1,300க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

