சிங்கப்பூர் அமைச்சர்களுக்கு எதிராக ஆன்லைன் சிட்டிசன் இணையத்தளத்தின் ஆசிரியரான டெரி ஸு என்பவரும் அந்த இணையத்தளத்திற்கு கட்டுரை சமர்ப்பித்த டேனியல் டி கோஸ்டா என்பவரும் அவதூறு பரப்பினர் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், டி கோஸ்டா கணினியைத் தவறாகப் பயன்படுத்திய ஒரு குற்றச்சாட்டின் பேரிலும் குற்றம் புரிந்துள்ளதாக மாவட்ட நீதிபதி இங் பெங் ஹோங் நேற்று தீர்ப்பளித்துள்ளார்.
இவர்களின் தண்டனைக் குறைப்பு வாதம், அதைத் தொடர்ந்து அவர்களின் தண்டனை விதிப்புக்காக வழக்கு விசாரணை டிசம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நேற்று நீதிபதி இங் நேற்று தெரிவித்தார்.
சிங்கப்பூர் அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு பரப்பும் கடிதம் ஒன்றை திரு சிம் வீ லீ என்பவரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து திரு டி கோஸ்டா 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பினார். ஆளும் மக்கள் செயல் கட்சித் தலைமைத்துவத்தின் மிக உயர்மட்டத்தில் ஊழல் இருப்பதாக இவர் தமது கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

