கவியரசு கண்ணதாசன் விருதுக்குத் தகுதியானவர்களைப் பரிந்துரை செய்யும்படி கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரையும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் கேட்டுக் கொள்கிறது.
கவிஞர்; சிறுகதை, நாவல், கட்டுரை, நாடக எழுத்தாளர்; திரைக்கதை வசனம் எழுதியவர்; பாடலாசிரியர், பத்திரிகையாசிரியர் என பலதிறன் படைத்த கவிஞர் கண்ணதாசன் அந்தத் துறைகளிலே முத்திரை பதித்தவர். எனவே, இத்துறைகளில் குறைந்தது ஏதாவது ஒன்றில் சிறந்த திறன்காட்டி வருபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஒருவருக்கு கண்ணதாசன் விருது வழங்கி எழுத்தாளர் கழகம் சிறப்பிக்கிறது.
பரிந்துரை செய்வதற்கான விதிகள் பற்றிய மேல் விவரங்கள் பற்றி அறிய தொடர்பு கொள்க: நா. ஆண்டியப்பன் -97849105; கிருத்திகா- kiruthikavirku@gmail.com www.singaporetamilwriters.com இணையத் தளத்திலும் விவரங்கள் கிடைக்கும்.
பரிந்துரைகளை aavanna19@gmail.com அல்லது kiruthikavirku@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ, BLK 723 # 13-149, Yishun St 71, Singapore 760723 எனும் முகவரிக்கோ 30-11-2021க்குள் அனுப்பி வைக்கவும்.
விருதுத் தேர்வுக் குழு விருதுக்குரியவரைத் தெரிவு செய்யும்.
தேர்வு பெறுவோருக்கு டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறும் எழுத்தாளர் கழகத்தின் கவியரசு கண்ணதாசன் விழாவில் விருது வழங்கப்படும்.