கண் அழுத்த நோய் உள்ளவர்களுக்குக் கண்களில் ஏற்படக்கூடிய அழுத்தத்தைப் போக்க சிங்கப்பூர் உருவாக்கிய நுண்குழாய்ச் சாதனம் இப்போது 17 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
பிஜிஐ என்று குறிப்பிடப்படும் அந்த நுண்ணிய குழாய், உயர்தர சிலிகோனால் செய்யப்பட்டது. அது கண் அழுத்த நோய் உள்ளவர்களின் கண்விழியில் பொருத்தப்படும்.
கண்ணில் அழுத்தம் அதிகரிக்கும்போது திரவம் கண்ணில் இருந்து அந்தக் குழாய் வழியாக வழிந்து வெளியேறிவிடும். இதனால் கண்ணில் அழுத்தம் குறைந்து, கண் நரம்பு பாதிப்பு தவிர்க்கப்படும்.
புதிய நுண்குழாயை தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை மூத்த ஆலோசகரான பேராசிரியர் பால் சியூவும் தேசிய பல்கலைக்கழக சுகாதார முறை என்ற அமைப்பைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களும் உருவாக்கினர்.

