கொவிட்-19 ஒழியவில்லை, தொற்றுக் குறையவில்லை, வழக்கநிலை திரும்பவில்லை. கொரோனா காரணமாக தலைகீழாகிவிட்ட உலகம் மறுபடியும் பழைய நிலைக்குத் திரும்ப ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்துவரும் போதிலும் இதில் முழுமைன வெற்றி கிட்டுமா அல்லது கொரோனாவோடுதான் இனி மானிட இனம் வாழவேண்டியநிலை வருமா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
உலகம் முதன்முதலாக சந்திக்கும் கொரோனா கிருமியைக் கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதமாக, ஒரே வழிக இப்போதைக்கு இருப்பது தடுப்பூசிதான். அதைவிட்டால் வேறு வழியில்லை. இந்த ஒரே ஓர் ஆயுதத்துடன்தான் உலகம் கொரோனாவை எதிர்த்துப் போராடி வருகிறது.
கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி ஆற்றல்மிக்கதாக இருக்கிறது என்றாலும் அதையும் தாண்டி கிருமி உருமாறித் தப்பிவிடுகிறது. இதனால் கொரோனா கிருமியைத் தடுத்தால் மட்டும் போதாது. அந்தக் கிருமியிடம் இருந்து நம்மை நிரந்தரமாகப் பாதுகாத்துக்கொள்ளவும் தேவை கூடிவிட்டது.
இதன் காரணமாகத்தான் முழுமைக இரு முறை தடுப்பூசி போட்டுக்கொள்வதுடன் மட்டும் போதாது. பூஸ்டர் என்ற காப்பூசியையும் போட்டுக்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா கிருமி தொற்றுவதை, தன்னிடம் இருந்து கிருமி பரவுவதைத் தவிர்த்துவிட வேண்டும் என்று ஒருவர் முடிவு செய்தால் அதற்கு ஒரே வழி தடுப்பூசிதான். இதுதான் இப்போதைய நிலை.
இருந்தாலும் எந்த ஒரு தடுப்பூசியும் காலாகாலத்திற்கு அதே, வீரியத்துடன், அதே எதிர்ப்பு ஆற்றல் உந்துசக்தியுடன் இருக்கும் என்பது நிச்சயமில்லை. போகப்போக அதன் ஆற்றல் குறையும் என்பது சாத்தியமான ஒன்றுதான்.
கொரோனாவுக்கு எதிராகப் போடப்படும் தடுப்பூசி எத்தனை காலத்திற்கு உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தக்கவைக்கும் என்பதைப் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கும்போது தடுப்பூசிக்கு மேலும் காப்பூசி தேவைப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது.
இப்போது கொவிட்-19க்கு எதிராக இரண்டு தவணைகளில் தடுப்பூசி போடப்படுகிறது. இருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர், முழுமைகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவராகத் தகுதி பெறுகிறார். இந்தத் தகுதி, ஒருவர் இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டபின் ஓராண்டு 14 நாட் களுக்குப் பிறகு காலாவதிகிவிடும் என்று அரசாங்கம் வரைமுறை வகுத்துள்ளது.
தடுப்பூசியின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, கொரோனாவுக்கு எதிராக இடைவிடாத போரை முழு மூச்சாக நடத்திவரும் சிங்கப்பூர், அந்தப் போராட்டத்தின் ஓர் அங்கமாக, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் போடாதவர்களையும் வேறுபட்ட அணுகுமுறை மூலம் கைளுகிறது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், முழுவதும் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவர் எத்தனை நாட்களுக்கு அப்படிப்பட்ட ஒரு நிலையைத் தக்கவைத்துக்கொள்ள இயலும் என்பது மக்களின் அக்கறைக்கு உரிய ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஒருவர் முழுமைக தடுப்பூசி போட்டுக்கொண்டவராக நடத்தப்படும் ஒரு நிலை குறிப்பிட்ட காலத்திற்குத்தான் செல்லும். பிறகு அது காலாவதி ஆகிவிடும் என்றால் அது மக்களிடத்தில் குறிப்பாக முழுவதும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடத்தில் பல கேள்விகளைக் கிளப்பிவிடும் என்பதைத் தவிர்ப்பதற்கில்லை. ஆகைல் இந்தப் பிரச்சினை முக்கிய விவாதமாக ஆகி இருக்கிறது.
தடுப்பூசி எந்த அளவுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது என்பதை வெளிப்படுத்தும் உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்வுகளைக் காலக்கிரம முறைப்படி பரிசீலித்து வரும் சுகாதார அமைச்சு, ஒருவர் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவராகக் கருதப்படும் கால அளவு, மேலும் தகவல்களும் புள்ளிவிவரங்களும் கிடைக்கக்கிடைக்க மறுபரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஆகைல், இந்தப் பிரச்சினை பற்றி பொதுமக்கள் அளவுக்கு அதிகமாகக் கவலைகொள்ளவேண்டிய தேவை இருப்பதாகத் தெரியவில்லை.
அதேவேளையில், காப்பூசியின் முக்கியத்துவத்தின்மீது அவர்கள் தங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டிய ஓர் உந்துதலும் இதன்மூலம் ஏற்பட்டு இருக்கிறது. காப்பூசிச் செயல்திட்டம் சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் மும்முரமாக சூடுபிடிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கொரோனாவுக்கு எதிரான வலுவான பாதுகாப்பை அளிப்பதும் அந்தக் கிருமி காரணமாக ஏற்படக்கூடிய கடுமைன பாதிப்புகளைத் தவிர்த்துக்கொள்ள உதவுவதும் இப்போதைக்கு தடுப்பூசி ஒன்றுதான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
உருமாறி வரும் கிருமிகளையும் ஒடுக்குவதில் அவை விரும்பிய பலனைத் தருகின்றன.
என்றாலும் மற்ற தடுப்பூசிகளைப் போலவே, கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஆற்றலும் காலவோட்டத்தில் மங்கக்கூடும். இதைத்தான் அண்மையில் நியூர்க் டைம்ஸ் செய்தித்தாள்கூட சுட்டிக்காட்டி இருக்கிறது. இப்படி ஆற்றல் மங்குவதால் தடுப்பூசி பலன் இல்லாதது என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது என்பதை வல்லுநர்கள் அடிக்கடி சுட்டிக்காட்டுகிறார்கள்.
இப்போதைய தடுப்பூசிகள் ஆற்றல்மிக்கவைக இருந்தாலும் அவற்றின்மூலம் உடலில் ஏற்படக்கூடிய நோய் எதிர்ப்பு ஆற்றலை நீண்ட நெடுங்காலத்திற்கு நீட்டித்து கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது. இதைத்தான் காப்பூசிகள் செய்கின்றன.
இவை ஏற்கெனவே உடலில் போடப்பட்ட தடுப்பூசிகளால் ஏற்பட்டு இருக்கும் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தி உடலில் கிருமி நுழைத அளவுக்கு முழு அரணை ஏற்படுத்துகின்றன.
சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படியும் காப்பூசியைப் போட்டுக்கொள்ளும்படியும் பொதுமக்கள், குறிப்பாக முதியோர் திரும்பத்திரும்ப வலியுறுத்தப்பட்டு வருவதற்கு இதுவே முக்கிய காரணம். முழுமைக தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்கள் காப்பூசியையும் போட்டுக்கொண்டால் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் 10 மடங்கிற்கும் மேல் கூடுகிறது.
கொவிட்-19 கிருமியுடன் உலகம் இனி வாழ வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படும்பட்சத்தில் தடுப்பூசியும் தவிர்க்க இயலாத ஒன்று என்ற ஒரு நிலையும் ஏற்படும் என்பதே உண்மை.
இதர தொற்றுநோய்களுக்கு எதிராக வருடாந்திர அடிப்படையிலான தடுப்பூசிகளை ஏற்கெனவே உலகம் பார்த்து வருகிறது. இதுபோலவே கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி மூலம் தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியநிலை வரக்கூடும் என்பதையும் தவிர்ப்பதற்கில்லை.

