மனநல புரிந்துணர்வு மேம்பட தொண்டூழியர் பணி முக்கியம்

மனநல புரிந்துணர்வு மேம்பட தொண்டூழியர் பணி முக்கியம்

1 mins read
87d76fd9-fa3c-4f10-a580-c505ef92a3db
-

மன­நல புரிந்­து­ணர்வை மேம்­ப­டுத்த தொண்­டூ­ழி­யர்­கள் பணி மிக முக்­கி­யம் என்று கலா­சார, சமூக இளை­யர்­துறை அமைச்­சுக்­கான நாடாளு­மன்­றச் செய­லா­ளர் எரிக் சுவா தெரி­வித்­தார்.

கொவிட்-19 கார­ண­மாக ஏற்­பட்டு இருக்­கும் மன­ந­லப் பிரச்­சினை­களைப் பற்றிய புரிந்­துணர்வை மேம்­படுத்த மேலும் அதிக தொண்டூழி­யர்­கள் தேவை என்று அவர் குறிப்­பிட்­டார்.

அதோடு மட்­டு­மின்றி, அக்­கம் பக்­கத்­தி­ன­ரை­யும் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளை­யும் கண்­கா­ணித்து வரு­வ­தில் ஒவ்­வொ­ருக்­கும் பணி இருப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

'சில்­வர் ரிப்­பன் சிங்­கப்­பூர்' என்ற மன­நல ஆலோ­சனை அமைப்­பின் நீண்­ட­கால சேவை விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்­தது. அதில் கலந்­து­கொண்டு திரு சுவா உரை­யாற்­றி­னார்.

நேற்­றைய நிகழ்ச்­சி­யில் 15 தொண்­டூ­ழி­யர்­கள் விருது வழங்கி சிறப்­பிக்­கப்­பட்­ட­னர். அவர்­கள் ஐந்து முதல் 15 ஆண்டு காலம் தொண்­டூ­ழி­யத்­தில் ஈடு­பட்டு மக்­க­ளின் மன­ந­லம் மேம்­பட பாடு­பட்டு வந்­தி­ருக்­கி­றார்­கள்.

சில்­வர் ரிப்­பன் அமைப்பு கடந்த 15 ஆண்டு காலத்­தில் 860,000க்கும் அதி­க­மா­ன­வர்­க­ளுக்கு நன்மை செய்­துள்­ள­தாக திரு சுவா குறிப்­பிட்­டார். சில்­வர் ரிப்­பன் அமைப்பின் நிர்­வா­க சபை உறுப்­பி­னர்­களும் நேற்று சிறப்­பிக்­கப்­பட்­ட­வர்­களில் அடங்­கு­வர்.

மாடர்ன் மாண்­டி­சோரி இன்­டர்­நே­ஷ­னல் குழு­மத்­தின் தலை­வ­ரும் தலைமை நிர்­வா­கி­யு­மான டாக்­டர் டி. சந்­து­ரு­வும் அவர்­களில் ஒரு­வர்.

சில்­வர் ரிப்­பன் அமைப்­பின் அடிப்­படை நோக்­கமே மக்­க­ளுக்கு உத­வு­வ­து­தான் என்று டாக்­டர் சந்துரு, 67, (படம்) தெரி­வித்­தார்.