சிங்கப்பூர் வலைப்பதிவாளர் அமோஸ் யீ, 23, அமெரிக்காவில் சிறார் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். குற்ற ஒப்புதல் அல்லது மறுப்பு வாக்குமூலம் அளிக்க அவருக்கு ஒருமாத கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.
அந்த வாய்ப்பை யீ பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரில் இரு முறை குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட யீ, 2016ல் அமெரிக்கா சென்றார். அங்கு 2017ல் அவருக்கு அடைக் கலம் கிடைத்தது.
அமெரிக்காவில் சிறார் பாலியல் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து சென்ற அக்டோபரில் அவர் கைதானார்.
அது முதல் விசாரணைக் காவலில் இருந்து வருகிறார். யீக்கு US$1 மில்லியன் பிணை அனுமதிக்கப்பட்டு உள்ளது.

