17 நாடுகளில் பயன்படும் சிங்கப்பூரின் கண்டுபிடிப்பு

17 நாடுகளில் பயன்படும் சிங்கப்பூரின் கண்டுபிடிப்பு

1 mins read
4e3fab61-d1a5-4bf3-80b0-6f50d8167e86
-

கண் அழுத்த நோய் உள்­ள­வர்­களுக்­குக் கண்­களில் ஏற்­ப­டக்­கூடிய அழுத்­தத்­தைப் போக்க சிங்­கப்­பூர் உரு­வாக்­கிய நுண்­குழாய்ச் சாத­னம் இப்­போது 17 நாடு­களில் பயன்­ப­டுத்­தப்­படுகிறது.

பிஜிஐ என்று குறிப்­பி­டப்­படும் அந்த நுண்­ணிய குழாய், உயர்­தர சிலி­கோ­னால் செய்­யப்­பட்­டது. அது கண் அழுத்த நோய் உள்­ள­வர்­க­ளின் கண்­ணில் கண்­வி­ழி­யில் பொருத்­தப்­படும்.

கண்­ணில் அழுத்­தம் அதி­க­ரிக்­கும்­போது திர­வம் கண்­ணில் இருந்து அந்­தக் குழாய் வழி வழிந்து வெளி­யே­றி­வி­டும். இத­னால் கண்­ணில் அழுத்­தம் குறைக்­கப்­பட்டு கண் நரம்பு பாதிப்பு தவிர்க்­கப்­படும்.

புதிய நுண்­கு­ழாயை தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­மனை மூத்த ஆலோ­ச­க­ரான பேராசி­ரியர் பால் சியூ­வும் தேசிய பல்­க­லைக்­கழக சுகா­தார முறை என்ற அமைப்­பைச் சேர்ந்த அறி­வி­யல் அறி­ஞர்­களும் உரு­வாக்­கி­னர்.