சிங்கப்பூர் மாதர்களின் தொண்டுகளை அங்கீகரித்து சிறப்பிக்கும் நினைவு அஞ்சல்தலை நேற்று வெளியிடப்பட்டது.
சிங்கப்பூர் மாதர்களைப் போற்றி கொண்டாடும் ஓர் ஆண்டாக இந்த ஆண்டை நினைவுகூறும் வகையில், சிங்கப்பூர் போஸ்ட் நிறுவனமும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் சேர்ந்து மேற்கொள்ளும் முயற்சியாக இந்த அஞ்சல்தலையை சிங்போஸ்ட் வெளியிட்டது.
இதனிடையே, இந்த அஞ்சல் தலை பற்றி கருத்து கூறிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், இந்த அஞ்சல்தலையில் இடம்பெற்று இருக்கும் நன்னெறிகளின் அடிப்படையில் சிங்கப்பூரர்கள் இங்கு மாதர்கள் ஆற்றும் தொண்டுகளைத் தொடர்ந்து அங்கீகரிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

