புதிய கொவிட்-19 மருந்தை பரிசீலிக்கும் சிங்கப்பூர்

ஃபைசர் மருந்து உற்பத்தி பெருநிறுவனம் உருவாக்கியுள்ள புதிய கொவிட்-19 மாத்திரை தொடர்பிலான ஆரம்பக்கட்ட தரவுகள் நம்பிக்கை அளிப்பதாக சிங்கப்பூரின் தொற்றுநோய் தடுப்பு நிலையம் தெரிவித்தது. ஆயினும், இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்னர் மேலும் தரவுகளுக்காக எதிர்பார்ப்பதாக நிலையம் கூறியது.

இந்த மாத்திரையை உட்கொள்ளும் நோயாளிகள் கடுமையாக நோய்வாய்ப்படும் அல்லது உயிரிழக்கும் அபாயத்தை 89 விழுக்காடு வரை குறைக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதாக ஃபைசர் நவம்பர் 5ஆம் தேதி தெரிவித்தது.

மாத்திரையின் இடைக்கால சோதனை முடிவுகளை ஃபைசர் நிறுவனம், அமெரிக்காவின் உணவு மருந்து நிர்வாகத்தினரிடம் அனுப்பவிருப்பதாகத் தெரிவித்தது. பேக்ஸ்லொவிட் என்ற அந்த சிக்கிசைமுறை, புதிய மருந்தை மற்றொரு மாத்திரையான ரிட்டோனவிருடன் இணைக்கிறது.

உருமாறிய கொவிட்-19 கிருமி வகைகளுக்கு எதிராகவும் இந்த மாத்திரை வேலை செய்யும் ஆற்றல் இருப்பதாக ஃபைசர் நிறுவனம் தெரிவித்தது.

இந்த மருந்தை வாங்கும் ஒப்ப்ந்தத்தில் சிங்கப்பூர் அண்மையில் கையெழுத்திட்டது. சிங்கப்பூரின் சுகாதார அறிவியல் ஆணையம் இதற்கு ஒப்புதல் அளித்தால் இந்த மருந்து சந்தையில் வெளியிடப்படும்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!