மேலும் 2,304 பேருக்கு கொரோனா; 14 பேர் மரணம்

மேலும் 2,304 பேருக்கு கொரோனா; 14 பேர் மரணம்

1 mins read
391601d1-ae01-4b72-98e5-6a3750082237
-

சிங்கப்பூரில் நேற்று முன்தின நிலவரப்படி கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மேலும் 14 பேர் மாண்டனர். மாண்டவர்கள் 61 வயதுக்கும் 94 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்களில் 13 பேருக்கு ஏற்கெனவே வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாக சுகாதார அமைச்சு கூறியது. சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 576ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மேலும் 2,304 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. அவர்களில் 2,179 பேருக்குச் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குவிடுதிகளில் 120 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த ஐவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்களில் 388 பேர் 60 வயதும் அதற்கும் மேற்பட்டவர்கள்.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 235,480ஆக அதிகரித்துள்ளது. கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 253 நோயாளிகளுக்கு உயிர்வாயுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. சீரற்ற உடல்நிலை கொண்டுள்ள 51 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவதாக அமைச்சு கூறியது.