கடலோரக் காவல் படைக்கு புதிய இயந்திரப் பாவனைக் கருவி

கடலோரக் காவல் படைக்கு புதிய இயந்திரப் பாவனைக் கருவி

1 mins read
6b10ccc0-9965-4b7c-bcee-e3dcf6f5d4e1
கடலோரக் காவல் படை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் புதிய இயந்திரப் பாவனைக் கருவி. படம்: சிங்கப்பூர் போலிஸ் படை -

நடு­க்க­ட­லில் பணி­யில் ஈடு­ப­டும்­போது தங்­கள் படகு கவிழ்ந்­தால் அதைச் சமா­ளிக்க கட­லோ­ரக் காவல் படை அதி­கா­ரி­க­ளுக்­குப் புதிய இயந்திரப் பாவனைக் கருவி வழி பயிற்சி அளிக்­கப்­ப­டு­கிறது.

கட­லோ­ரக் காவல் படை­யின் பிரானி முகா­மில் உள்ள பத்து மீட்­டர் ஆழ­முள்ள முக்­கு­ளிப்புப் பயிற்சிக் குளத்­தில் இந்­த இயந்திரப் பாவனைக் கருவி பொருத்­தப்­பட்­டுள்­ளது.

கட­லோ­ரக் காவல் படை அதி­கா­ரி­கள் உயிர்க்­காக்­கும் மேலங்கி ­களை அணிந்­தி­ருப்­ப­தால் அவர்­கள் வெளி­யேற முடி­யா­மல் சிர­மப்­ப­டக்­கூ­டும். கவிழ்ந்த பட­குக்­குள் இருப்­ப­தால் அவர்­கள் நிலை­த­டு­மா­றக்­கூ­டும்.

உயிர் தப்­பிக்க அவர்­கள் உடனடியாக தங்­கள் உயிர்­காக்­கும் மேலங்­கி­க­ளைக் கழற்­றி­விட்டு பாது­காப்­பான இடத்­துக்கு நீந்­திச் செல்ல வேண்­டும்.

இதற்­குத் தேவை­யான பயிற்சி யை இந்­தப் புதிய இயந்திரப் பாவனைக் கருவி அவர்­க­ளுக்கு அளிக்­கிறது.

தண்­ணீ­ருக்கு அடி­யில் நடத்­தப்­படும் இந்­தப் பாவ­னைப் பயிற்சி முறை கடந்த ஆகஸ்ட் மாதம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

இயந்திரப் பாவனைக் கருவியில் அதி­க­பட்­சம் ஐவர் ஏறிக்­கொள்­ள­லாம். நடுக்­க­ட­லில் படகு கவிழ்­வது போல முக்குளிப்புப் பயிற்­சிக் குளத்­தில் இயந்திரப் பாவனைக் கருவியும் கவி­ழக்­கூ­டி­யது.

அப்­படி அது கவி­ழும்­போது கற்­றுத்­த­ரப்­பட்ட உத்­தி­க­ளைப் பயன்­ப­டுத்தி அதி­கா­ரி­கள் தங்­கள் மேலங்­கி­க­ளி­லி­ருந்து விடு­பட்டு பாது­காப்­பான இடத்­துக்­கும் நீந்­திச் செல்ல வேண்­டும்.