புக்கிட் பாத்தோக், பிடோக் சவுத், அப்பர் சாங்கி ஆகிய வட்டாரங்களில் குறிப்பிட்ட சில வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புக் கட்டடங்களில், உள்ளே இருக்கும் பொருட்களை வெளியே இருப்பவர்கள் தெளிவாகப் பார்க்கக்கூடிய மறுசுழற்சித் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்துக்கு நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சும் தேசிய சுற்றுப்புற வாரியமும் தலைமை தாங்குகின்றன.
இத்திட்டத்தின்கீழ் ஒரே நேரத்தில் இரண்டு அறிமுகத் திட்டங்கள் அடுத்த எட்டு வாரங்களுக்கு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி வரை நடைமுறைப்
படுத்தப்படும்.
அறிமுகத் திட்டங்கள் ஹொங் கா நார்த் தனித் தொகுதி, ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி ஆகியவற்றுக்கு உட்பட்ட வட்டாரங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.
அந்த இரண்டு திட்டங்களில் ஒன்று, சாதாரண தொட்டியைவிட உள்ளே இருப்பவற்றை வெளியே இருப்போருக்குத் தெளிவாகக்
காட்டும் தொட்டிகளால் ஏற்படும் நன்மைகளை அளவிடும்.
ஒரே தொட்டியில் மறுசுழற்சி செய்யக்கூடிய பல்வகை பொருட்களைச் சேகரிப்பதற்குப் பதிலாக வெவ்வேறு வகை பொருட்களுக்கு தனித் தனி தொட்டிகளைப் பயன்
படுத்துவதால் ஏற்படும் நன்மையை மற்றொரு திட்டம் அளவிடும்.
இரண்டாவது திட்டத்தில் பயன்படுத்தப்படும் தொட்டிகளும் முதல் திட்டத்தில் பயன்படுத்தப்படும் தொட்டிகளைப் போன்று உள்ளே இருப்பவற்றை வெளியே இருப்போர் எளிதில் பார்க்கக்
கூடியதாக இருக்கும். 2019ஆம் ஆண்டில் நீடித்த நிலைத்தன்மை,
சுற்றுப்புற அமைச்சு நடத்திய மறுசுழற்சிப் பயிலரங்கின்போது இத்தகைய தொட்டிகளைப் பயன்படுத்தும் எண்ணம் முதன்முதலாகத் தோன்றியது.
வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை எவ்வாறு மறுசுழற்சி செய்வது என்பது தொடர்பாகப் பயிலரங்கில் பங்கெடுத்த 40க்கும் மேற்பட்டோர் பரிந்துரைகளை முன்வைத்தனர். முன்வைக்கப்பட்ட ஒன்பது பரிந்துரைகளில் நான்கு திட்டங்களை நடைமுறைப்படுத்த அமைச்சு முடிவெடுத்துள்ளது.
"உள்ளே இருப்பவற்றைத் தெளிவாகப் பார்க்கக்கூடிய தொட்டி
களைப் பயன்படுத்தி சரியான மறுசுழற்சி முறை மற்றும் பழக்கத்தை ஊக்குவிக்க திட்டங்கள் இலக்கு கொண்டுள்ளன," என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் கூறினார்.