உடலும் உள்ளமும் இனி இவரது கட்டுக்குள்

உடலும் உள்ளமும் இனி இவரது கட்டுக்குள்

3 mins read
b0f6a598-3c6a-48eb-85c8-faebf22922b9
-

பள்­ளிப்­ப­ரு­வத்­தில் உடற்­கட்டை வளர்க்­கத் தவ­றிய இளை­யர் பிலேமோன், ேதசிய சேவை­யைத் தொடங்கியதும் உடல் உறு­தியை எட்டும் இலக்கை நோக்­கி செயல்­பட்­டார்.

நான்கு மாதங்­க­ளுக்­குள் 13 கிலோ­கி­ராம் எடை­யைக் குறைத்து ஐபி­பிடி உடற்­ப­யிற்சி சோத­னை­யில் தங்க விருதைப் பெற்றுள்­ளார் ராணுவ நிபு­ணத்­து­வப் பயிற்­சி­யா­ள­ரான (Specialist Cadet) பதி­னெட்­டான் பிலே­மோன், 19.

பயிற்சி முடிந்த பின்­னர் ராணுவ போலிஸ் பிரி­வில் சக தேசிய சேவை­யா­ளர்­களை வழி­ந­டத்­தும் பொறுப்­பை­யும் இவர் ஏற்­க­வி­ருக்­கி­றார்.

செயிண்ட் ஜோசப் கல்வி நிலை­யத்­தில் அனைத்­து­லக பக்­க­லோ­ரெட் பட்­ட­யக் கல்வியைப் பயின்ற பிலே­மோன், ஹாக்கி விளை­யாட்­டா­ள­ராக இருந்­தார். படிப்பு பற்­றிய அச்­சம் இவ­ரைக் கவ்­வி­யதும் எல்லாமும் மாறியது.

"ஐபி பட்­ட­யத்­தின் இறு­தித் தேர்வு குறித்து பயம் ஏற்­பட்­டது. பள்­ளித் தேர்­வு­களில் மதிப்­பெண்­கள் சரி­யத்­தொ­டங்­கி­ய­போது உடற்­ப­யிற்சியைக் கைவிட்­டேன். கடு­மை­யா­கப் படிக்­கத் தொடங்­கி­ய­தால் படிப்­பில் முன்­னேற்­றம் ஏற்­பட்­டது. இறு­தித் தேர்­வில் 45 மதிப்­பெண்­களில் 36 எடுத்து சிறப்­பாக செய்­தேன்," என்று பிலே­மோன் குறிப்­பிட்­டார்.

"ஆனால் உடற்­ப­யிற்­சியே என் பயத்­தைப் போக்க உதவி இருக்­க­லாம். ஆனால் எனது பதற்­றத்­தைத் தணிக்க அதி­வே­க­மான வழி­களை நாடி­னேன். அள­வுக்கு அதி­மாக சாப்­பிட்­டது தீய பழக்­க­மாக மாறி­யது," என்று பிலே­மோன் விவ­ரித்­தார். விளை­யாட்டை நிறுத்­தி­ய­தால் பள்­ளி­யின் நாஃபா தேர்­வில் இரண்டு முறை தோல்வி அடைந்­த­தாக அவர் கூறினார்.

தேசிய சேவை­யா­ளர்களின் உடல் உறு­தியை மேம்­ப­டுத்­தும் 'பிடிபி' (PTP) திட்­டத்­தின்­படி தேசிய சேவையை இவர் முன்­கூட்­டியே சென்ற பிப்­ர­வரி 1ஆம் தேதி அன்று தொடங்­கி­னார்.

தற்­போ­தைய ஐபிபிடி (IPPT) முறைப்­படி புஷ்­அப், சிட்­அப், 2.4 கிலோ­மீட்­டர் ஓட்­டம் ஆகி­ய­வற்றை சேவை­யா­ளர்­கள் குறிப்­பிட்ட நேரத்­தில் செய்து முடிக்­க­வேண்­டும். ஜன­வரி தொடக்­கத்­தில் 2.4 கிலோ­மீட்­டர் ஓடி முடிக்க பிலே­மோ­னுக்கு 16 நிமி­டங்­கள் 20 வினா­டி­கள் பிடித்­தது. ஜூனில் அந்த நேரம் 11 நிமி­டங்­கள் 45 வினா­டி­க­ளாக இருந்­தது.

உடற்­ப­யிற்­சிச் சோத­னை­யில் தங்க விரு­து­டன் அடிப்­படை ராணுவப் பயிற்சியில் வெள்ளி துப்­பாக்கி முனைவாள் (Silver Bayonet) விரு­தை­யும் இவர் வென்­றி­ருக்­கி­றார்.

புலாவ் தெக்­கோங்­கில் அடிப்­படை ராணுவப் பயிற்­சியை முடித்த பிறகு பாசிர் லாபா­வில் பிலே­மோன் ராணுவ நிபு­ணர் பயிற்­சி­யைத் தொடங்­கி­னார்.

அங்கு ஆயு­தங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது, போர்க்­கா­லத்­தில் வீரர்­களை வழி­ந­டத்­து­வது, சட்ட ஒழுங்கை கட்­டிக்­காப்­பது போன்­ற­வற்­றைக் கற்­றார் பிலே­மோன்.

வாழ்க்­கைப் பண்­பு­கள் பல­வற்­றைப் பற்றி அறிந்து கொண்­ட­தா­க­வும் இந்த இளை­யர் கூறி­னார்.

"தலை­மைத்­து­வத்­தில் இருப்­ப­வர்­கள் தங்­க­ளது துறையை நன்கு அறிந்­தி­ருக்­க­வேண்­டும். அத்­து­டன் தொடர்­புத் திறன் மிக­வும் முக்­கி­யம். பிரச்­சி­னை­கள் பெரி­தா­கும்­போது அவற்­றைத் தணிக்­கும் வழி­­கள் ராணுவ போலி­சார் அவ­சி­யம் கற்­க­வேண்­டிய திற­னா­கும்," என்­றார் பிலே­மோன்.

தலை­மைத்­து­வத்தை வெறும் கட­மை­யாக எண்­ணா­மல் தம்­மு­டன் பணி­யாற்­று­ப­வர்­க­ளு­டன் மனம் திறந்து பழ­கு­வது நல்ல தலை­வ­ருக்கு அழகு என்பது பிலேமோனின் கருத்து.

"பிறர் நம்மை தயக்­க­மில்­லா­மல் அணு­கும்­ப­டி­யான வச­தியை ஏற்­ப­டுத்­த­வேண்­டும். அப்­போ­து­தான் பிரச்­சி­னை­கள் ஏற்­படும் முன் அவற்றை முன்­கூட்­டியே தடுத்து நன்கு நிர்­வ­கிக்க முடி­யும்," என்று அவர் கூறி­னார்.

செய்தி: கி.ஜனார்த்­த­னன்