கி. ஜனார்த்தனன்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மறைந்த 100ஆவது ஆண்டை அனுசரிக்கும் விதமாக சிங்கப்பூரில் இவ்வாண்டு நடத்தப்பட்டு வந்த பல்வேறு நிகழ்ச்சிகளை நிறைவு செய்யும் இசை நிகழ்ச்சி ஒன்று, வரும் 19ஆம், 20ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
'நிமிர்ந்த நன்னடை' எனும் இந்நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர் இந்திய நுண்கலைச் சங்கத்தின் முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். எஸ்பிளனேட் கலையரங்கம் ஒவ்வோர் ஆண்டும் நடத்தும் கலா உட்சவத்தின் பகுதியாக நிகழ்ச்சி இடம்பெறுகிறது.
பாரதியாருக்கு இசை அஞ்சலியைச் சமர்ப்பிக்கும் யோசனை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உருவானதாக நிகழ்ச்சியின் கலை இயக்குநர் வி எம் சாய் விக்னேஷ் தெரிவித்தார்.
"சக இயக்குநரான ஷ்ரேயா கோபி தேவையான அடிப்படை ஆய்வைச் செய்தபின்னர் என்னை இந்த முயற்சியில் இணைத்தார்.
"பாரதியாரின் கொள்ளுப்பேரனும் இசை நிபுணருமான டாக்டர் ராஜ்குமார் பாரதியை நாங்கள் அணுகினோம். சில கவிதைகளுக்கு இசையமைக்கும்படி நாங்கள் முன்வைத்த வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டார்," என்று திரு விக்னேஷ், 37, கூறினார்.
நிகழ்ச்சிக்கான பணிகள் கடந்தாண்டு மும்முரமாக தொடங்கியதாக குமாரி ஷ்ரேயா கோபி, 31, தெரிவித்தார்.
"தாள உதவிக்கு டி ஆர் சுந்தரேசன், மேற்கத்திய இசை அமைப்புக்கு இணை பேராசிரியர் டோனி மெக்கரோம் என பல நல்ல திறனாளர்கள் இதில் கைகோர்க்க இணங்கினர்," என்றார் ஷ்ரேயா.
உற்சாகம் தரும் பாரதியின் வரிகள்
அச்சமில்லை, பாப்பா பாட்டு, சென்றது மீளாது, புதுமைப் பெண், பகைவனுக்கு அருள்வாய், தெளிவு, ஆத்ம ஜயம், அக்கினிக் குஞ்சொன்று கண்டேன், யோக சித்தி ஆகிய பாடல்களின் பகுதிகள் இந்நிகழ்ச்சிக்குப் பயன்படுத்தப்படும்.
"இக்கவிதைகளின் வரிகள் மிகவும் இயல்பாகவே கேட்பவருக்கு உற்சாகத்தைத் தரக்கூடியவை. அதனால் தன்னம்பிக்கை எனும் இந்நிகழ்ச்சியின் கருப்பொருள் இயல்பாகவே அமைந்துவிட்டது," என்றார் குமாரி ஷ்ரேயா.
பாரதியார் அரசியல், சமூகம், என புறத்தில் செயல்பட்ட புரட்சியாளர் மட்டுமல்ல. மனிதர்களின் உணர்வுகளை மேல்நிலைக்கு ஏற்றும் பணியான அகப் புரட்சியிலும் ஈடுபட்டதை இவரது கவிதைகள் தெளிவாகக் காட்டுவதாக இயக்குநர்கள் தெரிவித்தனர்.
பாரதியார் கவிதைகளை மேலும் ஆழமாக ரசிக்க விரும்புவோர் எந்த மொழியைத் தெரிந்தவர்களாக இருந்தாலும் தயங்காமல் வரும்படி நிகழ்ச்சியின் தயாரிப்புக் குழு கேட்டுக்கொண்டது. அதன் பொருட்டு, பாரதியார் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் அடங்கிய கையேடுகள் நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் பாரம்பரிய இசை, மேற்கத்திய இசைக் கலவையுடன் கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டும் இடம்பெறும்.
திரு விக்னேஷுடன் நிஷாந்த் தியாகராஜன் வாய்ப்பாட்டில் இணைவர். திருவாட்டி சௌந்தர்யா கல்யான் வாய்ப்பாட்டுடன் வயலின் இசைக்கவிருக்கிறார்.
சுசந்தா சௌத்ரி சித்தாரையும் இசுரு விஜய்சோமா கித்தாரையும் வாசிப்பர். குமார் மோகன் கீபோர்டையும் யுஜீன் டியோ பல்வேறு தாள வாத்தியங்களையும் வாசிப்பர்.
பாரதியார் கவிதைகளைப் பலர் அறிந்திருந்தாலும் அதனை இசையுடன் ரசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் புதுமையானது என்றார் நிஷாந்த் தியாகராஜன், 27.
"கவிதை வரிகள் மாறாது. ஆனால் அதனுடன் சேரும் இசை வேறு வடிவம் பெறும்போது, நாம் அந்த வரிகளைப் புரிந்துகொள்ளும் விதம் மாறுபடுகிறது. நிகழ்ச்சியில் பாடும் நான் இதனை அனுபவபூர்வமாக உணர்கிறேன்," என்று அவர் கூறினார்.
ஒலிப்படைப்புக்கு அழகு சேர்க்கும் விதமாக வண்ணப் படங்களையும் ஒளி வடிவங்களையும் நிகழ்ச்சியின்போது காண்பிக்கவுள்ளார் 30 வயது மெர்வின் வோங்.
"முப்பரிமாண ஒளிவடிவங்கள், உயிரோவியப் படங்கள் என பல அம்சங்களை நான் இயக்குகிறேன். பாரதியாரின் கவிதைகளிலுள்ள உணர்வுகளை இவை பிரதிபலிக்கும்," என்று அக்கவிதைகளின் மொழிபெயர்ப்புகளைப் படித்துள்ள மெர்வின் கூறினார்.
மாறிவரும் கொவிட்-19 சூழலில் ஆரம்பக்கட்ட ஒத்திகைகள் தனித்தனியாக நடத்தப்பட்டன. ஆயினும் மனத்திடத்துடன் இவர்கள் முயற்சிகளைத் தொடர்ந்தனர்.
"பாரதியின் வரிகளே எங்களுக்குத் தொடர்ந்து ஊக்கமூட்டின," என்ற குமாரி ஷ்ரேயா, "அத்துடன் எஸ்பிளனேட் தரப்பினர் எங்களுக்கு உதவியும் ஊக்கமும் தந்தனர்," என்று அவர் கூறினார்.
பாரதி படைப்புகளில் புத்தாக்கத்திற்கு இடம் இருப்பதாகக் கூறினர் இயக்குனர் குமாரி ஷிரேயாவும் பாடகர் திரு நிஷாந்தும்.
"பாரதியார் இசைத் திறனும் பயிற்சியும் பெற்றவர். தமது கவிதைகள் சிலவற்றுக்கு ராகங்களை குறிப்பிட்டிருக்கிறார். இருப்பினும் வரையறைகளைத் தாண்டி இசையிலும் புதுமை செய்ய விரும்பினோம். எல்லைகளைக் கடந்து செல்ல விரும்பினோம்," என்று திரு விக்னேஷ் தெரிவித்தார்.
"தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ என்ற கவிதைவரி, இளையர்கள் மீது பாரதியார் வைத்திருந்த நம்பிக்கைக்கு என்றுமே சான்றாகும். பாரதியின் படைப்புகளுக்கு நாங்கள் தந்த வடிவம் இளையர்களை நிச்சயம் ஈர்க்கும் என்று நம்புகிறோம்," என்றார் திரு விக்னேஷ்.

"பாரதியார் இசைத் திறன் பயிற்சியும் பெற்றவர். தமது கவிதைகள் சிலவற்றுக்கு ராகங்களை குறிப்பிட்டிருக்கிறார். இருப்பினும் வரையறைகளைத் தாண்டி இசையிலும் புதுமை செய்ய விரும்பினோம். எல்லைகளைக் கடந்து செல்ல விரும்பினோம்," என்று திரு விக்னேஷ் தெரிவித்தார்.