போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக மலேசியாவைச் சேர்ந்த துப்புரவு மேற்பார்வையாளருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹார்பர்ஃபிரண்ட் அவென்யூவில் நிறுத்திவைக்கப்பட்ட அவரது மோட்டார்சைக்கிளில் ஒரு பையில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
முனுசாமி ராமமூர்த்தி எனும் அந்த ஆடவர், 6.3 கிலோகிராம் தூளை வைத்திருந்ததாகவும் அதில் 57.54 கிராம் போதைமிகு அபின் இருந்ததாகவும் ஆய்வுக்குப் பிறகு கண்டறியப்பட்டது. இக்குற்றத்துக்காக முனுசாமிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பதினைந்து கிராமுக்கும் அதிகமாக போதைமிகு அபின் கடத்தப்பட்டால், அதற்கு மரண தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுண்டு.
முனுசாமிக்கு தண்டனை விதித்த காரணத்தை விளக்கிய 42 பக்க அறிக்கையை, நீதிபதி ஆட்ரி லிம் இன்று எழுத்துபூர்வமாக வழங்கினார்.