சில வாரங்களில் மலேசியாவுடனான நில எல்லை திறப்பு

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடையே நிலம்­வ­ழிப்

பய­ணம் இன்­னும் ஒரு சில வாரங்­களில் தொடங்­கக்­கூ­டும். தடுப்­பூ­சிப் பய­ணத்­த­டத் திட்­டத்­தைப் போன்ற ஓர் பயண ஏற்­பாட்­டின்­கீழ் இது சாத்­தி­ய­மா­கும். கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் பேசிய வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங், இதன் தொடர்­பில் மலே­சி­யா­வு­ட­னான பேச்­சு­வார்த்தை நல்ல முன்­னேற்­றம் கண்டு வரு­வ­தா­கத் தெரி­வித்­தார். ஆனால், அது­கு­றித்த மேல்­வி­வ­ரங்­களை அவர் வெளி­யி­ட­வில்லை.

"இன்­னும் ஒரு சில வாரங்­களில் நிலம்­வ­ழிப் பய­ணத்­தைத் தொடங்க நாங்­கள் செயல்­பட்டு வரு­கி­றோம்," என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ருக்­கும் கோலா­லம்­பூ­ருக்­கும் இடையே நவம்­பர் 29ஆம் தேதி­யி­லி­ருந்து விடிஎல் எனப்படும் தடுப்­பூ­சிப் பய­ணத்­த­டத் திட்­டம் தொடங்­கப்­படும் என முன்­ன­தாக அறி­விப்பு வெளி­யா­கி­யி­ருந்­தது. இது, விமா­னப் பயண ஏற்­பா­டா­கும். சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடையே நிலம்­வ­ழிப் பய­ணம் எப்­போது தொடங்­கும் என இரு­நாட்டு மக்­களும் பெரும் எதிர்­பார்ப்­பு­டன் உள்­ள­னர். கொவிட்-19க்கு முந்­தைய சூழ­லில், உட்லண்ட்ஸ் கடற்­பா­லம்

மற்­றும் துவாஸ் இரண்டாவது இணைப்புப் பாலம் வழி­யாக தினமும் சுமார் 415,000 பேர் சென்று வந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!