கொள்ளைநோய் சூழலில் குடும்ப சேவை நிலையங்களில் உதவி கேட்டு நாடியோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
காலாண்டுதோறும் சுமார் 20,000 விவகாரங்களை அது கையாண்டுள்ளது. கிருமிப் பரவலுக்கு முன்பு இந்த எண்ணிக்கை காலாண்டுக்கு 17,000ஆக இருந்தது.
கடந்த ஆண்டு காம்கேர் மூலம் உதவி ெபற்றவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதில் சுமார் 96,000 பேர் காம்கேர் திட்டம் மூலம் பயனடைந்தனர். இதனுடன் ஒப்புநோக்க 2019ல் 78,000 பேருக்கு காம்கேர் உதவி வழங்கப்பட்டது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் சூலிங் இந்த விவரங்களை நேற்று வெளியிட்டார். ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நடந்த சிங்கப்பூர் பராமரிப்பு நிலையத்தின் (கேர் கார்னர்) 40வது ஆண்டு நிகழ்ச்சில் அவர் பங்கேற்றுப் பேசினார்.
'கேர் கார்னர்' என்பது சமூக சேவை அமைப்பாகும். குழந்தைகள், முதியோர், திருமணமான தம்பதியர் உட்பட 20,000 பேருக்கு அது சேவையாற்றி வருகிறது.
'புதிய பாதைகளை உருவாக்குவோம்' என்ற கருப்பொருளில் நடந்த மாநாட்டில் சுகாதார, சமூக, கல்வி ஆகிய துறைகளைச் ேசர்ந்த 450 பேர் பங்கேற்றனர்.
சிங்கப்பூரர்கள் எதிர்நோக்கும் சவால்களில் எப்படி ஒத்துழைக்கலாம் என்பது குறித்த தங்களுடைய அனுபவங்களையும் நடைமுறை களையும் அனைவரும் பகிர்ந்துகொண்டனர்.
கொள்ளைநோயால் மோசமடைந்துள்ள சிக்கலான பிரச்சினைகளை உதவி கேட்டு வருபவர்கள் எதிர் ேநாக்குவதாக சமூக சேவை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயத்தில் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் உள்ளிட்ட வரம்புகளை நமது சமூக சேவை அமைப்புகள் பின்பற்ற வேண்டிய நிலையில் இருப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பிரச்சினைகள் மோசமடைவதற்கு முன்பே தலையிட்டு குடும்பங்களுக்குத் தேவையான ஆதரவு வழங்கும் முயற்சிகளை அரசாங்கமும் சமூக அமைப்புகளும் மேம்படுத்தியுள்ளன.
அவற்றில் ஒன்றுதான் 'கிட் ஸ்டார்ட்' திட்டம். வருமானம் குறைந்த குடும்பங்களின் பிள்ளை களுக்கு இந்தத் திட்டம் கைகொடுக்கிறது. திருமணம், மணவிலக்கு போன்ற விவகாரங்களில் குடும்ப சேவை நிலையங்களின் குடும்பங்களை வலுப்படுத்தும் திட்டம் உதவி வருகிறது.