புதிய தனியார் வீடுகளின் விற்பனை கடந்த மாதம் 9 விழுக் காடு உயர்வுடன் மீட்சி அடைந்து உள்ளது.
இதற்கு முன்பு இரண்டு மாதங்களாக விற்பனை தொடர்ந்து மந்தமாக இருந்தது.
கடந்த மாதம் மொத்தம் 909 புதிய தனியார் வீடுகள் விற்கப்பட்டன.
செப்டம்பரில் விற்கப்பட்ட 834 வீடுகளுடன் ஒப்பிடுகையில் இது 9 விழுக்காடு உயர்வாகும். இருந்தாலும் ஆகஸ்ட் மாதம் விற்கப்பட்ட 1,216 வீடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவே. நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் இதனை தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு அக்டோபரில் விற்கப்பட்ட 654 வீடுகளுடன் ஒப்பிட்டால் இவ்வாண்டு அக்டோ பரில் 39 விழுக்காடு அதிகமாக வீடுகள் விற்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 661 புதிய வீடுகள் விற்பனைக்கு வந்தன. இது, செப்டம்பரில் அறிமுகமான 210 வீடுகளுடன் ஒப்பிடுகையில் மும் மடங்கு அதிகமாகும். ஓராண்டுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் 39 விழுக்காடு கூடுதலாகும்.
மூன்று பிரிவுகளில் தனியார் வீடுகளின் தேவை அதிகரித்துள்ளதாக ஆரஞ்ச்டீ அண்ட் டை நிறுவனத்தின் ஆய்வு மற்றும் பகுப்பாய்வு பிரிவின் மூத்த உதவி தலைவர் கிறிஸ்டின் சன் கூறினார்.
புறநகர்ப் பகுதிகளில் புதிய வீடுகளின் விற்பனை 38.2 விழுக்காடாகவும் இதையடுத்து நகரோரங்கள் மற்றும் மத்திய சிங்கப்பூரில் உள்ள வீடுகள் தலா 30.9 விழுக்காடாகவும் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே வீவக வீடு களின் விலை, தனியார் வீடுகளை காட்டிலும் வேகமாக அதிகரித்து வருவதால் வீவக வீட்டு உரிமை யாளர்கள் கொண்டோமினிய வீடுகளை வாங்கி வருகின்றனர்.
இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் ஏறக்குறைய 7,169 வீவக வீட்டு உரிமையாளர்கள், புதிய அல்லது மறுவிற்பனை தனி யார் வீட்டுக்கு மாறியுள்ளனர்.
கடந்த ஆண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் இது, 21 விழுக்காடு அதிகமாகும் என்று சொத்து ஆலோசனை நிறுவன மான ஜேஎல்எல் தெரிவித்தது.

