ரைஃபிள் ரேஞ்ச் சாலையில் செல்லும் விலங்குகளைக் கண்டறியும் கட்டமைப்பு அடுத்த ஆண்டு பிற்பாதியில் வைக்கப்படவுள்ளது. பழைய அப்பர் தாம்சன் சாலைக்குப் பிறகு அந்தச் கட்டமைப்பைப் பெறும் இரண்டாவது சாலை இது.
வனவிலங்குகள் சாலைகளைப் பாதுகாப்பாகக் கடக்கவும் அவை கடப்பதை வாகனமோட்டிகளுக்குத் தெரிவிக்கவும் அந்தக் கட்டமைப்பு உதவும்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, நேற்று இதை அறிவித்தார்.
மேலும், வனவிலங்குகள் பற்றிய பொதுமக்களின் கண்ணேட்டத்தைப் பற்றி அறிய முனையும் இரண்டு ஆய்வுகள் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், பொதுமக்கள் குரங்குகளுக்கு உணவு அளிப்பதற்கு எதிராக ஜேன் குடால் கழகம் (சிங்கப்பூர்) நடத்தும் விழிப்புணர்வு இயக்கத்தைப் பற்றி அமைச்சர் மேல்விவரம் அளித்தார்.
அக்கழகம் நடத்திய மெய்நிகர் கலந்துரையாடலில் அமைச்சர் பேசினார்.

