ஜெட்ஸ்டார் ஏஷியா: விரைவில் சிங்கப்பூர்-பெர்த் விமானச் சேவை

ஜெட்ஸ்டார் ஏஷியா: விரைவில் சிங்கப்பூர்-பெர்த் விமானச் சேவை

1 mins read
af0ad7aa-e768-4c0b-ae77-a73cd1f06dc8
சிங்கப்பூர்-பெர்த் தடத்தில் வாரத்திற்கு நான்கு விமானச் சேவைகள் வழங்கப்படும். படம்: ஜெட்ஸ்டார் ஏஷியா -

சிங்கப்பூரர்களுக்கு வீடாகவும் பிரபல சுற்றுலாத் தலமாகவும் இருக்கும் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்குச் செல்ல பயணிகள் இனி திட்டமிடலாம்.

'ஜெட்ஸ்டார் ஏஷியா' நிறுவனம், சிங்கப்பூருக்கும் பெர்த்துக்கும் இடையே அடுத்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதியிலிருந்து விமானச் சேவையைத் தொடங்குகிறது.

தடுப்பூசிப் பயணத்தடத் திட்டத்தின்கீழ், தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் பயணிகள் இருவழிப் பயணத்தை மேற்கொள்ள முடியும்.

இந்தப் பயணத் திட்டத்திற்கு அனுமதி கிடைத்ததும் சிங்கப்பூர்-பெர்த் தடத்தில் வாரத்திற்கு நான்கு விமானச் சேவைகள் வழங்கப்படும் என்று ஆஸ்திரேலியாவின் குவான்டாஸ் விமான நிறுவனத்தின் மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஜெட்ஸ்டார் தெரிவித்தது.

தற்போது, நவம்பர் 21ஆம் தேதியிலிருந்து சிட்னி, மெல்பர்ன் நகரங்களுக்கு, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் தேவையில்லாத இருவழிப் பயணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.