இம்மாதம் இறுதியிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி போட்டிருப்பது அவசியம்.
இந்தப் புதிய விதிமுறையை பொதுவாக உணவங்காடி கடைக்காரர்களும் காப்பிக் கடை உரிமையாளர்களும் வரவேற்றுள்ளனர்.
யூஹுவா வில்ேலஜ் ஈரச்சந்தை மற்றும் உணவங்காடி நிலைய சங்கத் தலைவர் வின்சென்ட் கோ, 60, பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகளுடன் ஐவர் மற்றும் இருவர் அமர்ந்து உணவு உண்பதற்கு ஏதுவாக மேசைகள் அமைக்கப்படும் என்றார்.
"எங்களுடைய ஈரச்சந்தை நிலையம் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 300க்கும் மேற்பட்ட மேசைகள் நெருக்கமாக அமைக்கப்பட்டு உள்ளன. ஒரு மேசையில் ஐவர் அமர்ந்தால் நெருக்கமாக உள்ள மற்றொரு மேசையை காலியாக வைக்க வேண்டும்," என்று அவர் வருத்தப்பட்டார்.
"மேசைகள் குறைவாக இருக்கும் நிலையில் ஐவருக்கான மேசையில் இருவர் அமர்ந்தால் என்ன செய்வது," என்று அவர் கேள்வி எழுப்பினார். ஆனால் எல்லா இடங்களில் இந்தப் பிரச்சினை இல்லை.
உதாரணமாக ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1ல் புளோக் 347 ல் உள்ள யூஹுவா ஈரச்சந்தை, உணவங்காடி நிலையம் சில ஆண்டு களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டதால் மேசைகள் அதிக இைடவெளி யுடன் அமைக்கப்பட்டுள்ளன. முதியோர் மற்றும் சக்கர நாற்காலியில் வருபவர்களும் எளிதாகச் சென்று வர முடியும்.
வேறுபட்ட தடுப்பூசி நடவடிக்கைகளை அமல்படுத்த உணவங்காடி நிலையம் மற்றும் காப்பிக் கடை உரிமையாளர்களுடன் சேர்ந்து செயல்படுவதாக கடந்த திங்கட்கிழமை சுகாதார அமைச்சு தெரிவித்தது.
வருகைப் பதிவு மூலம் உணவு உண்பவர்களின் விவரங்களை சரி பார்க்க வேண்டும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் அமர்ந்து உண் பதற்கு இம்மாதம் இறுதியில் முதல் குழுவைச் சேர்ந்த உணவங்காடி நிலையங்களில் கட்டுப்பாடு, சோதனை முறை அறிமுகப்படுத்தப் படவிருக்கிறது. இம்முறை பின்னர் மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிகிறது.
புதிய சோதனை முறையின் விவரங்களை அமைச்சு வெளியிடவில்லை. மரின் பரேட் கடைக்காரர்கள் சங்கத்தின் தலைவர் தையா பூன் ஹின், 55, "ஐவர் வரை சேர்ந்து உணவு உண்பது குடும்ப உறுப்பினர்களை மகிழ்ச்சி அடையச் செய்யும்," என்று குறிப்பிட்டார்.
காப்பிக் கடைகளும் இருவர், ஐவர் என மேசைகளைப் பிரிப்பதில் சவால்களை எதிர்நோக்குகின்றன. தேக்கா நிலைய உணவங்காடியில் பணிபுரியும் பெ. முருகேசன், 53, "ஐவர் அமரும் மேசையில் இருவர் அல்லது மூவர் அமர்ந்தாலும் ஒன்றும் சொல்ல முடியாது. கூடிய விரைவில் இந்த கட்டுப் பாடுகள் முற்றிலும் அகற்றப்பட்டால்தான் அனைவருக்கும் எளிதாக இருக்கும்," என்று கூறினார்.
"புதிய நடைமுறையால் இன்னும் அதிகமானோர் உணவருந்த வரு வார்கள் என்று நம்புகிறோம்," என்று கூறிய வெஸ்ட் கோஸ்ட் உணவங் காடியில் கடை நடத்தும் முகமது முசாஹுதீன், 48, "ஒரே குடும் பத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வப் போது சேர்ந்து வந்து சாப்பிட நல்ல சந்தர்ப்பம் அமைந்துள்ளது, இதனால் வியாபாரம் பெருகும்," என்றார்.
(கூடுதல் செய்தி: இர்ஷாத் முஹம்மது)
சிராங்கூன் கார்டன்ஸ் ஈரச்சந்தை, உணவு நிலையத்தில் உணவு உண்ணும் வாடிக்கை யாளர்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் அமர்ந்து உண்ண விதிமுறை தளர்த்தப் பட்டுள்ளது.
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

