தெமாசெக் நிறுவனம், சிங்கப்பூர் குடும்பங்களுக்கு வாய் கொப் புளிப்புக்கும் திரவத்தை விநியோகிக்கிறது. இதற்கான பதிவு நேற்று தொடங்கியது.
டிசம்பர் 10ஆம் தேதி வரை வாய் கொப்புளிக்கும் திரவத்துக்கு குடும்பத்தினர் பதிந்துகொள்ளலாம்.
'பிவிபி-ஐ' எனும் போவிடோன்-ஐயோடின் திரவம், தொண்டை எரிச்சலை ஏற்படுத்தும் கிருமிகளைக் கொல்லக் கூடியது. தெமாசெக் அறநிறுவனத்தின் 'தயாராக இரு' எனும் முயற்சியின் கீழ் இந்தத் திரவம் விநியோகிக்கப்படுகிறது.
விருப்பமுள்ளவர்கள் 250 மில்லி லிட்டர் வாய் கொப்புளிக்கும் திரவப் போத்தலுக்கும் அளவு குவளைக்கும் இப்போது முதல் பதிந்துகொள்ளலாம்.
இம்மாதம் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 12 வரை தேர்வு செய்யப்பட்ட விநியோகிப்பு நிலையங்களிலிருந்து பதிவு செய்தவர்கள் வாய் கொப்புளிக்கும் திரவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.