சிங்கப்பூரில் 8,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கப்பல் சிப்பந்தி களுக்கு குறைந்தது ஒரு தடுப்பூசியாவது போடப்பட்டுள்ளது. கப்பல் துறையில் பணியாற்றும் சிப்பந்திகளுக்கு உலகளாவிய தடுப்பூசி போடும் திட்டத்தின் ஒரு பகுதியாக மேலும் 12,000 சிப்பந்தி களுக்கு தடுப்பூசி போடப்படும்.
தடுப்பூசி போட்ட 8,000 பேரில் வெளிநாட்டு கடலோடிகளில் 5,200 பேர் சிங்கப்பூரில் வசித்து வருகின்றனர். எஞ்சியோர், உல்லாசக் கப்பல் மற்றும் வட்டார கப்பல்களில் பணியாற்றி வருகின்றனர்.
இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையமும் சிங்கப்பூர் கப்பல் சங்கமும் அனைத்துலக பங்காளிகளுடன் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மேலும் 12,000 கப்பல் சிப்பந்திகள் முதல், இரண்டாவது அல்லது பூஸ்டர் தடுப்பூசியை இப்போது முதல் அடுத்த ஆண்டு ஜூன் 30க்குள் போட்டுக் கொள்ளவிருக்கின்றனர்.

