சமூகத் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்க $4.8 மில்லியன் ஒதுக்கீடு

2 mins read
681aa7b6-a9ec-40ca-a29f-b7e0b06cea4a
-

'மின்­னி­லக்க வாழ்வு நிதி' என்ற அர­சாங்­கத்­தின் நிதித் திட்­டத்­தில் $4.8 மில்­லியன் சேர்க்­கப்­படும்.

மின்­னி­லக்கத் தொழில்­நுட்­பம் வழி 100,000 மக்­கள் பலன் அடை­யும் வகை­யில் 21 புதிய அடிப்­படை சமூ­கத் திட்­டங்­க­ளுக்கு அந்த நிதி மூலம் ஆத­ரவு அளிக்­கப்­படும்.

அதி­பர் ஹலிமா யாக்­கோப் நேற்று இதனை அறி­வித்­தார். அதி­பரும் தக­வல், தொடர்பு அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ­வும் 'எஸ்­பிடி' என்ற அறப்­பணி அமைப்பை நேற்று பார்­வை­யிட்­ட­னர்.

அப்­போது அதி­பர் இந்த அறி­விப்பை விடுத்­தார்.

மின்­னி­லக்க வாழ்வு நிதியைக் கடந்த பிப்­ர­வரி மாதம் தக­வல் தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணையம் $2.5 மில்­லி­யன் நிதி­யு­டன் அமைத்­தது.

இன்­றைய தேதி­யில் நிறு­வ­னங்­கள், சமூ­கத்­தி­டம் இருந்து $7.6 மில்­லி­யன் திரட்­டப்­பட்டுள்ளது. அந்த நிதி மூலம் பயன்­ப­டக்­கூ­டிய ஓர் அமைப்­பாக எஸ்­பிடி அமைப்பு இருக்­கிறது.

எஸ்­பிடி அறப்பணி அமைப்பு, தன்­னு­டைய மின்­னி­லக்­கச் செயல்­திட்­டம் ஒன்­றின் கீழ் நடத்­தும் பயிற்சி வகுப்­பு­களை அதி­ப­ரும் அமைச்­ச­ரும் பார்­வை­யிட்­ட­னர்.

அந்­தப் பயிற்சி வகுப்­புக்கு 'மைக்­ரோ­சா­ஃப்ட்' நிறு­வ­ன­மும் 'எஸ்ஜி எனே­பில்' இயக்­க­மும் ஆத­ரவு அளிக்­கின்­றன. அந்­தப் பயிற்சி வகுப்­பில் கலந்­து­கொண்டு இரு நிலை 2ஏ வகுப்­பு­களை முடித்த நான்கு பேருக்கு அதி­பர் சான்­றி­தழை வழங்­கி­னார்.

அந்த வகுப்­பு­களில் முதல் நிலை­யில் டிரேஸ்­டு­கெ­தர், வாட்ஸ்­அப் போன்ற செய­லி­க­ளைப் பயன்­ப­டுத்த உடற்­கு­றை­யுள்ளோர் கற்­றுக்­கொள்­கி­றார்­கள்.

அந்தப் படிப்பின் இரண்­டா­வது நிலை­யில், சிங்­பாஸ், இணை­யப் பாது­காப்பு நடை­மு­றை­கள் போன்ற அர­சாங்க மின்­னி­லக்­கச் சேவை­களைப் பயன்­படுத்­து­வது பற்றி அவர்­க­ளுக்­குப் கற்பிக்கப்­ப­டு­கிறது.