சிங்கப்பூருக்கு இரு நாள் வருகை அளித்து இருக்கும் அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஜினா ரைமொண்டோ இஸ்தானாவில் பிரதமர் லீ சியன் லூங்கை நேற்று சந்தித்தார்.
மின்னிலக்க, பசுமைப் பொருளியல், விநியோகக் கட்டமைப்பின் மீள்திறன் போன்ற துறைகளில் சாத்தியமான ஒத்துழைப்புப் பற்றி தாங்கள் விவாதித்ததாக பிரதமர் திரு லீ ஃபேஸ்புக்கில் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட பொருளியல் உறவுகள் கொவிட்-19 சூழலிலும் ஆழமடைந்து இருப்பதாக திரு லீ குறிப்பிட்டார்.
தொற்றில் இருந்து பொருளியல் மீட்சி காண்பதை வலுப்படுத்த அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்பட தான் ஆர்வமாக இருப்பதாக திரு லீ குறிப்பிட்டு உள்ளார்.