வெளிநாட்டு ஊழியர் மருத்துவ தேவையை நிறைவேற்ற ‘ஹெல்த்­சர்வ்’ அமைப்பு நிதி திரட்டு

சிங்­கப்­பூ­ரில் உள்ள வெளி­நாட்டு ஊழியர்­களின் மருத்­து­வப் பரா­ம­ரிப்­புக்­காக, 'ஹெல்த்­சர்வ்' என்ற அரசு சார்­பற்ற மருத்­துவ அமைப்பு ரிபப்­ளிக் பல­துறை கல்­லூரி­யு­டன் சேர்ந்து நிதி திரட்­டும் இயக்­கம்(#ManyHelpingHands) ஒன்­றைத் தொடங்கி உள்­ளது.

இந்த அமைப்­பின் வழி­காட்­ட­லு­டன், விரி­வுரையாளர்­கள் மேற்­பார்­வை­யின் கீழ் அந்­தக் கல்­லூரியில் நிர்வா­கம், தொடர்­புத் துறையில் இரண்­டாம் ஆண்டு பயி­லும் மூன்று மாண­வர்­கள் நிதி திரட்­டும் இயக்­கத்­திற்­குத் தலைமை ஏற்றுள்­ள­னர்.

'ஹெல்த்­சர்வ்' கடந்த 15 ஆண்டுக­ளா­கவே வெளி­நாட்டு ஊழி­யர்­களுக்கு கட்டுப்­ப­டி­யா­கக்­கூ­டிய செல­வில் முழு­மை­யான சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பை அளித்து வரு­கிறது.

கேலாங்­கில் அது நடத்­தும் மருந்­த­கத்­தில் மருந்து உட்­பட மருத்­து­வ­ரைப் பார்க்க $8 முதல் $15 வரை­தான் கட்­ட­ணம் வசூலிக்­கப்­ப­டு­கிறது.

வேலை­பார்க்க இய­லாத சிறப்பு அனுமதி­ தா­ரர்களுக்கு அங்கு கட்­ட­ணம் இல்லை.

அந்த மருந்­த­கத்­திற்­குச் செல்­லும் வெளி­நாட்டு ஊழி­யர்களில் பாதிப்­பே­ருக்கு உயர் ரத்த அழுத்­தம், நீரி­ழிவு போன்ற­ ஏதாவது ஒரு உடல்­நலப் பாதிப்பு இருக்­கிறது என்­பதை 'ஹெல்த்­சர்வ்' சுட்­டிக்­காட்­டி­யது.

வேலை இடத்­தில் காயம் அடையும் ஊழியருக்கு மறுவாழ்வு பயிற்சி சிகிச்சை, அவ­சர பல் சிகிச்சை தேவைப்­ப­டக்­கூ­டிய ஊழி­யர்­கள் உள்­ள­னர்.

கொவிட்-19 கார­ண­மாக அனைத்துலக எல்­லை­கள் மூடப்­பட்டுவிட்­ட­தால் இந்த அமைப்­பின் நோய் சிகிச்சை செயல்­திட்­டத்­திற்குக் கடந்த இரண்டு ஆண்­டு­களில் தேவை தொடர்ந்து அதி­க­ரித்­துள்­ளது என்­ ப­தை­யும் 'ஹெல்த்­சர்வ்' அறிக்கை ஒன்­றில் சுட்­டி­யது.

நன்­கொடை வழங்க விரும்­பு­வோர் https://www.giving.sg/healthserve-ltd/help_migrant_workers_heal என்ற முக­வரி மூலம் தொடர்­பு­கொள்­ள­லாம்.

திரட்­டப்­படும் ஒவ்வொரு வெள்­ளிக்­கும் பந்­த­யப்பிடிப்­புக் கழ­கத்­தி­டம் இருந்து ஒரு வெள்ளி கிடைக்­கும். ஆக அதிகமாக அந்தக் கழகம் $250,000 கொடுக்கும்.

பிரச்­சி­னை­யை எதிர்நோக்கும் வெளி­நாட்டு ஊழி­ய­ரைப் பற்றி யாருக்­கா­வது தெரிந்­தால், வெளி­நாட்டு ஊழி­ய­ருக்கு உதவி தேவை என்று யாரா­வது கருதினால் அவர்­கள்+65 3129 5000 என்ற எண்­ மூலம் தொடர்­பு­கொள்­ள­லாம் என்று தெரிவிக்கப் பட்டு உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!