தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$3 செலவிட்டவருக்கு அடித்தது யோகம்

1 mins read
9a20fddc-9368-4a1f-943c-afa31042d6ba
(இடமிருந்து) லஸாடா சிங்கப்பூர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி லோ வீ லீ, ஓய்வுபெற்ற உணவங்காடிக் கடைக்காரர் சோவ் மெங் செங், புரோப்நெக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி இஸ்மாயில் கஃபூர். படம்: லஸாடா சிங்கப்பூர் -

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மீன் நூடல்ஸ் சூப் விற்று வந்த 70 வயது சோவ் மெங் செங், கனவிலும் எதிர்பார்க்காத பரிசு ஒன்றை வென்றுள்ளார்.

இணைய விற்பனைத் தளமான 'லஸாடா'வின் மாபெரும் அதிர்ஷ்டக் குலுக்கலில், $1 மில்லியன் மதிப்பிலான கொண்டோமினிய வீடு ஒன்றை இவர் வென்றார்.

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 11ஆம் தேதி நடத்தப்படும் 11.11 விற்பனை நிகழ்வில் திரு சோவ் செலவிட்டார். இவர் செலவிட்ட தொகை ஏறக்குறைய $3.

அதிர்ஷ்டக் குலுக்கலில் கலந்துகொள்ள, வாடிக்கையாளர்கள் தங்கச் சாவிகளைச் சேகரிக்க வேண்டும். அதற்கு, லஸாடா செயலியில் 'லேஸி ஸ்டார்' என்று அழைக்கப்படும் விளையாட்டு ஒன்றை ஆடவேண்டும். சில நடவடிக்கைகளையும் அவர்கள் நிறைவுசெய்ய வேண்டும்.

தங்கச் சாவிகளைச் சேகரிக்க சேகரிக்க, கொண்டோமினிய வீட்டை வெல்வதற்கான வாய்ப்பும் கூடும்.

தம் மகள் அறிமுகப்படுத்திய இந்த விளையாட்டை ஆடி ஐந்து தங்கச் சாவிகளைத் தாம் வென்றதாக திரு சோவ் கூறினார்.

"மாபெரும் பரிசை வென்றிருப்பது என்னால் இன்னும் நம்பமுடியவில்லை! தொடக்கத்தில், நான் வீடு வென்றதாக எனக்குத் தெரியப்படுத்தப்பட்டபோது இது ஒரு மோசடி என்று நான் நினைத்தேன். வாழ்வில் இந்த அளவுக்கு நான் அதிர்ஷ்டமாக உணர்ந்ததில்லை," என்றார் இவர்.