‘கிராப்’ செயலியில் 2வது நாளாக சேவைத் தடை

சிங்­கப்­பூ­ரி­லும் மலே­சியா, இந்­தோ­னீ­சியா, பிலிப்­பீன்ஸ், தாய்­லாந்து ஆகிய நாடு­களிலும் கிராப் (Grab) வாடகை வாக­னச் செய­லி­யைப் பயன்­ப­டுத்­து­வோ­ருக்கு தொடர்ந்து 2வது நாளாக நேற்று சேவைத் தடை ஏற்­பட்­டது. கிராப் செய­லி­யின் சேவை செய­லி­ழந்த ஆக மோச­மான சம்­ப­வம் இது­வா­கக் கரு­தப்­ ப­டு­கிறது.

செய­லி­யைப் பயன்­ப­டுத்­து­வோர் பல்­வேறு தேவைத் தடை­களை எதிர்­நோக்­கி­னர்.

அவர்­க­ளால் பய­ணத்­துக்கு வாக­னத்தை முன்­பு­திவு செய்ய முடி­ய­வில்லை. அல்­லது உணவு விநி­யோ­கச் சேவை­க­ளைப் பயன்­ப­டுத்த இய­ல­வில்லை.

பய­ணச் சேவை­களை வழங்­கிய கிராப் வாக­ன­மோட்­டி­கள், தங்­க­ளால் பயண முன்­ப­தி­வு­க­ளைப் பெற முடி­ய­வில்லை என்று கூறி­னர்.

தேவைத் தடை ஏற்­பட்­டதை, சிங்­கப்­பூ­ரில் உள்ள கிராப் நிறு­வ­னப் பேச்­சா­ளர் ஒரு­வர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளி­டம் உறு­தி­செய்­தார்.

இந்த வட்­டா­ரத்­தில் உள்ள பல பங்­கா­ளி­க­ளை­யும் செய­லி­யைப் பயன்­ப­டுத்­து­வோ­ரை­யும் அது பாதித்­தது என்று கூறி­னார்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை முற்­ப­க­லுக்­குள் பெரும்­பா­லான சேவை­கள் மீண்­டும் இயங்­கத் தொடங்­கி­ விட்­ட­தாக அவர் சொன்­னார்.

எனி­னும், சில­ருக்கு அவ்­வப்­போது சேவைத் தடை­கள் ஏற்­பட்­டன என்­றும் அந்­தப் பேச்­சா­ளர் கூறி­னார்.

பிரச்­சி­னை­க­ளை சரி­செய்ய தாங்­கள் கடு­மை­யா­கப் பணி­யாற்றி வரு­வ­தா­க­வும் பாதிக்­கப்­பட்­ட­வர் ­க­ளி­டம் நிறு­வ­னம் மன்­னிப்­புக் கேட்­டுக்­கொள்­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

வாடிக்­கை­யா­ளர்­களும் உணவு விநி­யோ­கச் சேவை வழங்­கு­வோ­ரும் சேவைத் தடை பற்றி புகார் அளித்­த­னர். சிலர், சேவைத் தடை பற்றி கிராப் தங்களுக்குத் தெரி­வித்­தி­ருக்க வேண்­டும் என்­ற­னர்.

கிராப் சேவையை நேற்று பிற்­ப­க­லில் தமிழ் முரசு சோதித்­துப் பார்த்­தது. அத­னால் செய­லி­யில் கூடு­தல் பணம் நிரப்­ப­வும் வாக­னத்தை முன் ­ப­திவு செய்­ய­வும் முடிந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!