சிங்கப்பூர் இந்திய அமைச்சர்கள் இரு நாடுகளுக்கிடையே விமானப் பயணங்களை மீண்டும் தொடங்குவது பற்றி கலந்துரையாடியுள்ளனர்.
புளூம்பெர்க் புதிய பொருளியல் கருத்தரங்குக்காக சிங்கப்பூருக்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், போக்குவரத்து அமைச்சர் திரு எஸ். ஈஸ்வரனை நேற்றுக் காலை அது குறித்து சந்தித்துப் பேசினார்.
சந்திப்பு குறித்து தமது ஃபேஸ்புக் தளத்தில் பதிவிட்ட திரு ஈஸ்வரன், இரண்டு பேரும் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகாலப் பங்காளித்துவத்தை உறுதிப்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.