காய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றைச் சட்டவிரோதமாக இறக்குமதி செய்த மொத்த வியாபாரி இங் கய் ஹோங் என்பவருக்கு $8,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஏறத்தாழ
1800 கிலோ காய்கறி, பழங்களை சிங்கப்பூருக்குள் கொண்டு வந்ததை கய் தெரியப்படுத்தவில்லை. இதைக் கண்டுபிடித்த அதிகாரிகள் ஒட்டுமொத்த சரக்குகளையும் கைப்பற்றினர்.