செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
3310af16-56a7-4dbd-bc43-08213b0a517d
-

சண்டையில் காயமடைந்த

நீர்நாய்க்குட்டி உயிரிழந்துவிட்டது

மூன்று பெரிய நீர்நாய்களுடன்

17 வாரங்களே நிறைந்த பெண் நீர்நாய்க்குட்டி ஒன்று சண்டை இட்டதில் அதன் பின்னங்கால்கள் செயலிழந்து போயின. அதை அடுத்து குட்டி இறந்துவிட்டதாக ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் 'ஓட்டர்சிட்டி' நேற்று தெரிவித்தது. குட்டிக்கு மருத்துவ உதவி அளிக்க பலரும் முயன்றனர். ஆனால், குட்டியைச் சுற்றி அதன் குடும்பம் இருந்ததாகக் கூறப்பட்டது. மறுநாள் குட்டியைக் காண வந்தவர்களுக்கு அதன் சடலமே எஞ்சியது. (படம்: ஓட்டர்சிட்டி)

பயணப் பெட்டி தாமதம்: $31,000 மோசடி செய்தவருக்குச் சிறை

பயணப் பெட்டி தாமதமாக வந்தது தொடர்பில் போலி கோரிக்கைகளைச் சமர்ப்பித்த 46 வயது வென்டி டான் பாயிக் சிம் என்பவருக்கு 14 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவரது இழப்பீட்டுக் கோரிக்கைகளால் வெவ்வேறு காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து டான் கிட்டத்தட்ட $31,000ஐப் பெற்றுக்கொண்டார். பயணப் பெட்டி தாமதிக்கப்பட்டது தொடர்பில் 'கேத்தே பசிபிக் ஏர்வேஸ்' நிறுவனத்திடமிருந்து வந்த கடிதத்தைக் கொண்டு வெவ்வேறு விமான நிறுவனங்களுக்கு டான் கடிதம் அனுப்பி இழப்பீடு கோரியதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.