சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையைத் தொடங்குமாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 சிறைக் கைதிகள் சமர்ப்பித்த விண்ணப்பம், உயர் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்தில் 'ஃபிகா' விவாதம் நடந்தபோது, தங்களுக்கு எதிராக இனப் பாகுபாடு காட்டப்பட்டதாக கைதிகள் வழக்கு தொடுத்திருந்ததைப் பற்றி திரு சண்முகம் பேசிய கருத்துகள் தொடர்பில் விண்ணப்பம் செய்யப்பட்டது. விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டதுடன் வழக்குக்கான செலவுத் தொகையை திரு செங் கிம் குவான், அவர் நிறுவனத்தில் பணிபுரியும் திரு எம்.ரவி இருவரும் தனிப்பட்ட முறையில் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றத்திடம் அரசு தலைமை சட்ட அலுவலகம் கோரியது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விண்ணப்பம் நிராகரிப்பு
1 mins read
-

