ஆஸ்திரேலியாவிடமிருந்து சிங்கப்பூர் சுமார் 500,000 ஃபைசர்-பயோஎன்டெக் கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டது. ஆகஸ்ட் மாதத்தின்போது இரு நாடுகளும் மேற்கொண்ட ஓர் ஒப்பந்ததத்தின்படி முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு சிங்கப்பூர் கொடுத்த 500,000 தடுப்பூசிகளுக்குப் பதிலாக ஆஸ்திரேலியா இப்போது தடுப்பூசிகளை அனுப்பிவைத்துள்ளது.
உருமாறிய டெல்டாகிருமி வகையின் தாக்கத்திலிருந்து ஆஸ்திரேலியா தொடர்ந்து மீண்டு வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள இந்த ஒப்பந்தத்தால் ஆஸ்திரேலியா விரைவில் தனது தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்த முடிந்ததாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் நோய்த்தடுப்பு முயற்சிகளுக்கு உதவியது குறித்து மகிழ்வதாகத் தெரிவித்த பிரதமர் லீ சியன் லூங், கிருமிப்பரவலை முறியடிக்க நாடுகள் ஒன்றுபடவேண்டும், அப்போதுதான் நாம் அனைவரும் புதிய இயல்புநிலைக்குச் செல்ல முடியும் எனத் தெரிவித்தார். சிங்கப்பூர் தனது பங்கை ஆற்ற தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய மக்களில் சுமார் 70 விழுக்காட்டினருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.