கொவிட்-19 கொள்ளைநோயை சிங்கப்பூர் எதிர்கெள்ளும்போது அவ்வப்போது தனது செயல்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டி உள்ளது. அத்துடன், தினமும் சில ஆயிரக்கணக்கானோர் இந்த நோய்க் கிருமியால் பாதிக்கப்படுவர் என்ற நிலையை மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்ற முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு பிரதமர் லீ சியன் லூங் புளூம்பெர்க் ஊடகத்தின் புதிய பொருளியல் என்ற கருத்
தரங்கில் பங்கேற்று அதன் முதன்மை ஆசிரியர் ஜான் மிக்கல்துவெய்ட் என்பவருக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இந்தக் கொள்ளைநோயை எதிர்கொள்ள சிங்கப்பூர் சிறந்த முறையில் செயல்படும் என்றாலும், உயிரிழப்புகளை தவிர்க்க முடியாது. இதில் பெரும்பாலும் முதியவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் விளக்கினார்.
"சளிக்காய்ச்சல், நிமோனியா போன்ற நோய்களால் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் இறப்பதுபோல் இதுவும் வாழ்க்கையின் ஒரு கால ஓட்டமாகிவிடும், இதை ஏற்றுக்கொண்டு, இது கட்டுக்கடங்காமல் போய்விடுவதை தவிர்க்கும் வகையில் இதை எதிர்கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார். மற்ற நாடுகளில் அங்குள்ள மக்கள் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளும் முன்னரே தொற்று பரவி அவர்கள் கொடுத்த மிகப் பெரிய விலையை போல் அல்லல் படாமல் இதற்கான ஒரு தீர்வை எட்ட சிங்கப்பூர் முயற்சி செய்கிறது என்று பிரதமர் லீ தெரிவித்தார்.
அதனால்தான், இந்தக் கிருமியுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்ற நிலையிருந்தும் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகிறது என்றும் இப்படி செய்தால்தான் திடீர் திடீரென மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவிக்கும் அவசியம் இருக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
சிங்கப்பூர் மேலும் தளர்வுகளை அறிவிக்காததற்கு காரணம் அங்கு அறுபது வயதுக்கு மேற்பட்ட, அதிக நோய் பாதிப்பு அபாயமுள்ள ஆனால் இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 61,000 பேர்தானா என்ற கேள்விக்கும் திரு லீ பதில் அளித்தார். அவர்களுக்கு உற
வினர்கள், நண்பர்கள் அன்புக்குரியவர்கள் என 61,000க்கும் அதிகமானோர் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட பிரதமர் லீ, அவர்களை அப்படியே ஒதுக்கிவிட முடியாது என்றார்.
"நோயால் பாதிக்கப்பட்டு அவர்களைக் குணப்படுத்த முடியாமல் தவிக்கும் நிலை, உயிர்வாயு கிடைக்காமலோ, சிகிச்சையளிக்க மருத்துவமனைகளில் வசதியில்லாமலோ அவர்கள் உயிரிழக்கும் நிலை, இவற்றை எதிர்கொள்ள எனக்குத் துளியும் விருப்பமில்லை," என்று பிரிட்டன், இத்தாலி அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடந்தவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.
கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, செயல்பாடுகளை மாற்றிக் கொள்வது, நாட்டு எல்லைகளை திறந்துவிடுவது இவற்றில் எல்லாம் மக்கள் நம்மீது வைத்துள்ள நம்பிக்கையே முக்கியமானது என்றும் திரு லீ கூறினார்.
கொவிட்-19 பணிக்குழுவில் தமக்குப் பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ள இருவரை (அமைச்சர்கள் ஓங் யி காங், லாரான்ஸ் வோங்) நியமித்துள்ளதாகக் கூறிய திரு லீயிடம், இது நெட்ஃபிளிக்ஸ் தொலைக்காட்சியில் வரும் 'ஸ்குவிட் கேம்' (தென்கொரியாவில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி தொடர்- அதில் பெரும் பண முடையில் இருக்கும் பலர் ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு பயங்கரமான விளையாட்டில் ஈடுபட்டு இறுதியில் பெரும் ரொக்க பரிசுக்காக ஒருவர் பின் ஒருவராகக் கடைசி நபர் வரை உயிரிழப்பர்) இருக்கிறதே என்று திரு லீயிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அத்துடன், அவர்களின் செயல்பாடு எப்படி உள்ளது, அவர்கள் நீக்கப்படுவார்களா இல்லை அவர்கள் தொடர்வார்களா என்று வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த பிரதமர் லீ சியன் லூங், "இதில் நான் வெற்றியாளரைத் தேடவில்லை, இவர்களுக்கு மாற்றாக என்னிடம் வேறொருவர் இல்லை. நான் ஒரு குழுவை உருவாக்க முயற்சி செய்கிறேன்.
"அந்தக் குழுவில் மிகப் பெரிய பொறுப்பை ஏற்று, எனது, என்னுடன் ஒத்த வயதுடைய தலைவர்களுக்கு அப்பால், அடுத்த தலைமுறை சிங்கப்பூரை உருவாக்க பல திறன்களைக் கொண்ட பல்வேறு நபர்கள் தேவை. அவர்கள் அனைவரும் ஒருவிதத்தில் பங்களிப்பர். அவர்களை நான் ஓர் அழகுப் போட்டிக்காக நியமிக்கவில்லை. அவர்களை நான் நியமித்ததற்குக் காரணம் ஒரு முக்கி யமான பணி ஆற்ற வேண்டியுள்ளது, அதற்கு அவர்களால் பங்
களிக்க முடியும் என்பதால். கொவிட்-19 பணிக் குழுவில் சிறப்பாக செயல்படக்கூடியவர்களை நான் நியமிக்காமல் எப்படி இருக்க முடியும்," என்று எதிர்வினா எழுப்பினார் திரு லீ.