எதிர்நடவடிக்கையையும் மீறி நீரிழிவு பாதிப்பு அதிகரிப்பு

எதிர்நடவடிக்கையையும் மீறி நீரிழிவு பாதிப்பு அதிகரிப்பு

1 mins read
7b3e006b-fed4-42f8-8545-45393ada3e60
-

நீரி­ழிவு நோய்க்கு எதி­ரா­கக் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக மேற்­கொள்­ளப்­பட்ட எதிர்­ந­ட­வ­டிக்கை

களை­யும் மீறி 2019ஆம்

ஆண்­டுக்­கும் கடந்த ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் சிங்­கப்­பூ­ரில் அந்­நோ­யால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை சற்று அதி­க­ரித்­தது.

அந்­தக் கால­கட்­டத்­தில்

நீரி­ழிவு நோயால் பாதிக்­கப்­பட்­டோர் விகி­தம் 9.5 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது. 2017ஆம் ஆண்­டில் அது 8.8 விழுக்­கா­டாக இருந்­தது.

2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்­தி­லி­ருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடத்­தப்­பட்ட தேசிய மக்­கள்­தொகை சுகா­தார ஆய்வு அறிக்­கை­யில்

இந்தப் புள்­ளி­வி­வ­ரங்­கள் வெளி­யி­டப்­பட்­டன. நாள்­பட்ட நோயான நீரி­ழிவு நோய் சிங்­கப்­பூ­ரில் தொடர்ந்து ஒரு பிரச்­சி­னை­யாக இருந்து வரு­வதை அறிக்கை காட்­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் கடந்த சில ஆண்டுக­ளாக உயர் ரத்த அழுத்­தத்­தால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்து

வந்­துள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­

பட்­டுள்­ளது. 2019ஆம் ஆண்­டுக்­கும் கடந்த ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் கிட்­டத்­தட்ட 35.5 விழுக்­காட்­டி­னர் உயர் ரத்த அழுத்­தத்­தால் பாதிக்­கப்­பட்­ட­னர்.

அதே கால­கட்­டத்­தில் பத்­தில் நால்­வ­ருக்கு உயர் ரத்­தக் கொழுப்பு இருந்­தது.

2017ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் 2019ஆம் ஆண்­டுக்­கும் கடந்த ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் உயர் ரத்த அழுத்­தத்­தா­லும் உயர் ரத்­தக் கொழுப்­பா­லும் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­பதை அறிக்கை காட்­டு­கிறது.