'மைஸ்' துறைக்கு உணவகக் கருத்தரங்கு மூலம் ஊக்கம்

'மைஸ்' துறைக்கு உணவகக் கருத்தரங்கு மூலம் ஊக்கம்

3 mins read
219711a6-0d20-4209-839a-cf0007826910
'ரெஸ்டராண்ட் ஏஷியா', 'கெஃபே ஏஷியா', 'ஸ்வீட்ஸ் அண்ட் பேக்ஸ் ஏஷியா' ஆகிய நிகழ்ச்சிகள் ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு திரும்பியுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மரினா பே சேண்ட்ஸ் கண்­காட்சி மையத்­தில் நேற்று தொடங்­கிய 'ரெஸ்டராண்ட் ஏஷியா 2021' எனும் உணவு, பானக் கருத்­த­ரங்கு, வர்த்­தக கண்­காட்சி சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் மீட்­சிக்கு மற்­றொரு பெரிய ஊக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

கொவிட்-19 தடை­கள் தளர்த்­தப்­பட்­ட­தி­லி­ருந்து இன்­று­வரை இங்கு நடை­பெற்ற மிகப்­பெ­ரிய 'மைஸ்' (கூட்­டங்­கள், மாநா­டு­கள், கண்­காட்­சி­கள்) நேற்று முதல் மூன்று நாட்­க­ளுக்கு நடை­பெ­றும். இந்த நிகழ்ச்­சி­யில் ஒரு நாளைக்கு 1,000 பேர் பங்­கேற்­பார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்த நிகழ்­வில் மில்­கென் ஏஷியா கழ­கத்­தின் உச்­ச­நி­லைக் கூட்­டம், புளூம்பெர்க் புதிய பொரு­ளி­யல் கருத்­த­ரங்கு என மேலும் இரு நிகழ்ச்­சி­கள் இடம்­பெ­று­கின்­றன.

முழு­மை­யாக கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுள்­ள­வர்­கள் பங்­கேற்­கும் பெரிய வர்த்­த­க மாநாடுகளின் வரி­சை­யில் இது முதல் நிகழ்ச்­சி­யாக அமை­கிறது.

நேற்று நடை­பெற்ற புளூம்பெர்க் கருத்­த­ரங்­கில் சுமார் 300 அனைத்­து­லக வர்த்­தக, அர­சாங்­கத் தலை­வர்­கள் கலந்­து­கொண்­ட­னர், கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று முடி­வ­டைந்த மில்­கென் ஏஷியா கழ­கத்­தின் உச்­ச­நி­லைக் கூட்­டத்­தில் 200 பேர் வரை­யி­லான வர்த்­தக தொடர்பு மண்­ட­லங்­கள் உரு­வாக்­கப்­பட்­டன.

மற்ற இரண்டு நிகழ்­வு­க­ளைப் போலல்­லா­மல், ரெஸ்டராண்ட் ஏஷியா 2021 நிகழ்­வுக்கு முந்­தைய பரி­சோ­தனை எது­வும் தேவை­யில்லை.

ஏறக்­கு­றைய இரண்டு ஆண்டு இடை­வெ­ளிக்­குப் பிறகு மீண்­டும் வந்துள்ள உணவு, பான நிகழ்வு நாளை வரை நடை­பெ­றும். மேம்­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்பு நட­வ­டிக்­கை­களில் அனைத்து பங்­கேற்­

பா­ளர்­க­ளின் முன்­ப­திவு மற்­றும் ஐந்து வர்த்­தக தொடர்பு மண்­ட­லங்­களில் ஒன்­றில் அவர்­கள் செல­வி­டக்­கூ­டிய நேர வரம்­பு­களும் அடங்­கும்.

ஒவ்­வொரு காலை மற்­றும் பிற்­

ப­கல் அமர்­வு­க­ளுக்­கும் சுமார் 500 பங்­கேற்­பா­ளர்­கள் அனு­ம­திக்­கப்­

ப­டு­கி­றார்­கள். மேலும் நிகழ்வு அமர்­வு­க­ளுக்கு இடை­யில் கிருமி நீக்­கம் செய்­யப்­ப­டு­கிறது.

தொடக்க விழா­வில், சிங்­கப்­பூர் உண­வ­கச் சங்­கத்­தின் தலை­வர் திரு ஆண்ட்ரூ குவான், "பாதிக்­கப்­பட்ட உணவு, பானத் தொழில்­து­றையை மீண்­டும் நிலை­பெ­றச் செய்ய, எட்டு பேர் உணவு உண்ண அனு­ம­திக்கவேண்டும்," என அழைப்பு விடுத்­தார்.

"நான் இந்த ஒரு பணிவான கோரிக்­கையை முன்­வைக்க விரும்­பு­கி­றேன். அதா­வது - தடுப்­பூசி போடப்­பட்ட மற்­றும் மருத்­துவ ரீதி­யாக விலக்கு அளிக்­கப்­பட்ட அனை­வ­ரும் எட்டு பேராக உண­வ­ளிக்க அனு­ம­திக்க வேண்­டும். இந்­தக் கோரிக்கை வியா­பார வேகத்­தைக் குறைக்­கா­மல் சற்று அதி­கப்­ப­டுத்த உத­வி­யாக இருக்­கும்," என்று அவர் கூறி­னார்.

"சிங்­கப்­பூர் உண­வ­கச் சங்­கம்­மற்­றும் எங்­கள் உறுப்­பி­னர்­கள், ஒரு தொழில்­து­றை­யாக, தடுப்­பூசி போட்­ட­வர்­களா என்­பதை உறுதி செய்­வ­தி­லும் காண்­கா­ணிப்­ப­தி­லும் எங்­கள் பங்கை ஆற்ற உறு­தி­

ய­ளிக்­கி­றோம்."

தற்­போது, உணவு, பானக் கடை­களில் உண­வ­ருந்­து­வ­தற்­கான குழு அளவு வரம்பு முழு­மை­யா­கத் தடுப்­பூசி போடப்­பட்ட இரண்டு நபர்­கள் அல்­லது ஒரே வீட்­டில் இருந்து முழு­மை­யாக தடுப்­பூசி போடப்­பட்ட ஐந்து நபர்­கள்.

உணவு, பானத் துறை மீட்­

ப­டைந்து வரும் இவ்­வே­ளை­யில், நேற்­றைய உணவு, பானக் கருத்­த­ரங்­கின் சிறப்பு விருந்­தி­ன­ரான வர்த்­தக தொழில் அமைச்­சர் கான் கிம் யோங், தொழில்­மு­னை­வோ­ருக்­கான வழி­காட்­டிப் புத்­த­கத்தை வெளி­யிட்­டார்.

"ஒவ்­வோர் ஆண்­டும், ஐந்­தில் ஒரு உணவு, பானக் கடை­ மாற்­றப்­ப­டு­வ­தைக் காண்­கி­றோம், மேலும் இரண்டு உணவு, பான வர்த்­த­கங்­கள் நான்கு ஆண்டு களுக்கு மேல் செயல்பட்டதில்லை. மேலும் அதி­க­மா­னோர் இந்­தத் துறை­யில் நுழைந்­தா­லும் கூட, உணவு, பானத் துறை ஒரு சவா­லாக உள்­ளது," என்று அவர் கூறி­னார்.

"புதிய தொழில்­மு­னை­வோர் தங்­கள் உணவு, பான பய­ணத்­தைத் தொடங்­கும் முன் கவ­ன­மாக திட்­ட­மிட வேண்­டி­யது மிக­வும் அவ­சி­யம்" என்று திரு கான் மேலும் கூறி­னார்.

'ரெஸ்டராண்ட் ஏஷியா 2021' கருத்தரங்கு: நாளொன்றுக்கு 1,000 பேர் வருவர் என எதிர்பார்ப்பு