தத்தெடுத்த பெண்பிள்ளைக்கு 6 வயது முதல் பல ஆண்டு காலம் பாலியல் துன்புறுத்தல்: ஆடவருக்குச் சிறை

தத்தெடுத்த பெண்பிள்ளைக்கு 6 வயது முதல் பல ஆண்டு காலம் பாலியல் துன்புறுத்தல்: ஆடவருக்குச் சிறை

2 mins read
4b462c5b-beb5-4619-90bc-d99ef8282715
-

தத்­தெ­டுத்து வளர்த்த பெண் பிள்­ளையை பல ஆண்டு காலம் பாலி­யல் துன்புறுத்தல் செய்த ஆட­வ­ருக்கு நேற்று நீதி­மன்­றத்­தில் 32 மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. 50 வய­தைக் கடந்­த­வர் என்­ப­தால் அந்த ஆட­வ­ருக்­குப் பிரம்­ப­டிக்­குப் பதி­லாக கூடு­த­லாக 10 வார சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

வயது குறைந்த சிறு­மியை மான­பங்­கம் செய்த குற்­றத்­தை­யும் மான­பங்­கம் செய்த மற்­றொரு குற்­றத்­தை­யும் அவர் ஒப்­புக்­கொண்­ட­தைத் தொடர்ந்து தண்­டனை அறி­விக்­கப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட சிறுமி 2009ஆம் ஆண்டு ஆறு வய­தாக இருந்­த­போது தமது தந்தை என்று நம்­பிய ஆட­வ­ரால் முதன்­மு­த­லாக பாலி­யல் சீண்­ட­லுக்கு ஆளா­னார். அது பல ஆண்­டு­க­ளுக்­குத் தொடர்ந்­தது. இருப்­பி­னும் கடந்த ஆண்டு அக்­டோ­பர் 2ஆம் தேதி தமது பள்­ளி­யின் தலைமை ஆசி­ரி­ய­ரி­ட­மும் ஆலோ­ச­க­ரி­ட­மும் தமக்கு நேர்ந்து வரும் பாலி­யல் துன்புறுத்தல் குறித்­துத் தெரி­வித்­த­தைத் தொடர்ந்து போலி­சில் புகார் தெரி­விக்­கப்­பட்­டது. அப்­போ­து­தான் தாம் தத்­தெ­டுக்­கப்­பட்ட பிள்ளை என அச்­சி­று­மிக்­குத் தெரிய வந்­த­தாக நீதி­மன்ற ஆவ­ணங்­கள் குறிப்­பி­டு­கின்­றன. அவ­ரது அடை­யா­ளத்­தைப் பாது­காக்­கும் பொருட்டு அவ­ரது பெய­ரும் குற்­ற­வா­ளி­யின் பெய­ரும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

தற்­போது 65 வய­தா­கும் அந்த ஆட­வர் கைது செய்­யப்­படும் வரை தமது மனை­வி­யு­டன் சேர்ந்து உண­வுக்­கடை நடத்தி வந்­தார். 2014ஆம் ஆண்டு தொடக்­க­நிலை 5ல் தமது பள்­ளி­யில் பாலி­யல் கல்வி கற்­ற­போது பாலி­யல் துன்புறுத்தல் செயல்­கள் குறித்து அச்­சி­று­மிக்­குத் தெரிய வந்­தது.

தாம் தந்தை என நம்­பிய ஆட­வர் தம்மை பாலி­யல் ரீதி­யா­கத் துன்­பு­றுத்­துவ­தை­யும் அவர் செய்­வது தகாத செயல் என்­ப­தை­யும் அப்­போது அச்­சி­றுமி உணர்ந்­தார். இருப்­பி­னும் இதனை வெளி­யில் சொன்­னால் யாரும் நம்ப மாட்­டார்­கள் என்று அவர் பயந்­த­தாக அர­சுத்­த­ரப்பு வழக்­க­றி­ஞர் டே ஜிங்ஸி நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.