2022 புலி ஆண்டு சிறப்பு நாணயங்கள்; டிசம்பர் 17 வரை முன்பதிவு செய்து வாங்கலாம்

2022 புலி ஆண்டு சிறப்பு நாணயங்கள்; டிசம்பர் 17 வரை முன்பதிவு செய்து வாங்கலாம்

2 mins read
39172bf8-8e00-4a77-a9e3-085af0e388de
வெவ்வேறு உலோகக் கலவையிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்படும் சிறப்பு நாணயங்கள். படம்: சிங்கப்பூர் நாணய ஆணைய இணையத்தளம் -
multi-img1 of 3

2022 புலி ஆண்­டைக் குறிக்­கும் 10 சிறப்பு நாணங்­களை சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் வெளி­யிட்டு உள்­ளது. ஜன­வரி 1 முதல் இவை விற்­ப­னைக்கு விடப்­படும்.

பாசிர் பாஞ்­சாங்­கில் சீன புரா­ணக் கதை மற்­றும் நாட்­டுப்­பு­றக் கதை­களை சித்­தி­ரிக்­கும் பல்­வேறு சிலை­க­ளு­டன் புகழ்­பெற்று விளங்­கிய 'ஹா பார் வில்லா' கலா­சார பூங்­கா­வின் பின்­ன­ணி­யு­டன் புலி உரு­வம் நாண­யத்­தின் ஒரு பக்­கம் பொறிக்­கப்­பட்டு இருக்­கும்.

மற்­றொரு பக்­கம் பொது­வாக நாண­யத்­தில் காணப்­படும் நான்கு மொழி­யு­டன் கூடிய சிங்­கப்­பூர் சின்­னம் 2022 ஆண்­டு­டன் இருக்­கும்.

பத்து நாணயங்­களும் வெவ்­வேறு உலோ­கக் கலவை மற்­றும் வடி­வங்­களில் தயா­ரிக்­கப்­படும். வெள்ளி நாண­யம் என்று அழைக்­கப்­படும் நிக்­கல் பூசப்­பட்ட, 41 மில்­லி­மீட்­டர் சுற்­ற­ளவு கொண்ட நாண­யம் ஒவ்­வொன்­றின் விலை $2.

மேலும், 60 மில்­லி­மீட்­டர் சுற்­ற­ளவு கொண்ட தங்க நாண­யத்­தின் விலை $200. இதே­போல, தயா­ரிப்­பைப் பொறுத்து வெவ்­வேறு விலை­களில் நாண­யங்­கள் கிடைக்­கும்.

ஒவ்­வொரு நாண­யத்­தின் வடி­வம் மற்­றும் உலோ­கக் கல­வை­யைப் பொறுத்து 100 முதல் 50,000 வரை­யி­லான எண்­ணிக்­கை­யில் தயா­ரிக்­கப்­படும்.

தனித்­தனி நாணயங்­கள் தவிர, வெவ்­வேறு வடி­வம் மற்­றும் உலோக நாண­யங்­களை உள்­ள­டக்­கிய சிறப்­புத் தொகுப்­பும் கிடைக்­கும்.

சிங்­கப்­பூர் நாணய ஆலை இவற்றை விற்­ப­னைக்கு விடும். இந்த சிறப்பு நாண­யங்­களை வாங்க விரும்­பு­வோர் இதன் இணை­யத்­

த­ளத்­தில் நவம்­பர் 18 (நேற்று) முதல் டிசம்­பர் 17 வரை முன்­ப­திவு செய்து­ கொள்­ள­லாம். இருப்­புக்கு அதி­க­மாக பலர் கேட்­டி­ருந்­தால் குலுக்­கல் முறை­யில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு விநி­யோ­கிக்­கப்­படும் என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் தெரி­வித்துள்­ளது.