இல­வச வாய்க் கொப்­பளிப்­பான் 25 சிங்­கப்­பூர் பூல்ஸ் கிளைகளில் திங்கள் முதல் விநியோகம்

இல­வச வாய்க் கொப்­பளிப்­பான் 25 சிங்­கப்­பூர் பூல்ஸ் கிளைகளில் திங்கள் முதல் விநியோகம்

1 mins read
144f5b6e-7f5a-4faa-8858-6c0b8785d331
-

வரும் 22ஆம் தேதி திங்­கட்­கி­ழ­மை­யில் இருந்து, 25 சிங்­கப்­பூர் பூல்ஸ் கிளை­களில் இருந்து ஒரு போத்­தல் வாய் கொப்பளிக்­கும் திர­வத்தை சிங்­கப்­பூர் குடும்­பங்­கள் இல­வ­ச­மா­கப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

தெமா­செக் அற­நி­று­வ­னத்­தின் 'ஆயத்­த­மாக இருப்­போம்' திட்­டத்­தின்­கீழ் வாய்க் கொப்பளிப்­பான் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

தொண்டை எரிச்­சலை ஏற்­

ப­டுத்­தும் கிரு­மி­களை இத்­தி­ர­வம் கொன்­று­வி­டும் என்­ப­தால் கொவிட்-19 தொற்று ஏற்­படும் வாய்ப்பு குறை­யும். அடுத்த மாதம் 12ஆம் தேதி­வரை, காலை 10 மணி­யில் இருந்து மாலை 5 மணி­வரை வாய்க் கொப்ப­ளிப்­பான் விநி­யோ­கம் இடம்­பெ­றும்.

இந்த 250 மி.லி. திரவ போத்­த­லைப் பெற விரும்­பும் குடும்­பங்­கள், 9099 6600 என்ற எண் வழி­யாக 'Hello' என்ற செய்­தியை அனுப்பி, அத­னைப் பெறும் நாள், நேரம், இடம் ஆகி­ய­வற்­றைப் பதிவு­ செய்­ய­லாம். https://stayprepared.sg/staywell/register/ என்ற இணை­யப்­பக்­கம் வழி­யா­க­வும் பதி­வு­செய்­ய­லாம்.

தாங்­கள் குறிப்­பிட்ட சிங்­கப்­பூர் பூல்ஸ் கிளைக்­குச் சென்று, 'எஸ்பி' பொதுப் பய­னீட்­டுக் கட்­டண விலைப்­பட்டி அல்­லது கணக்கு எண்­ணை­யும் மின்­னஞ்­சல் அல்­லது வாட்ஸ்­அப் மூலம் வந்த உறு­தித்­த­க­வ­லை­யும் காட்டி, வாய் கொப்பளிக்­கும் திர­வத்தை பெற்­றுக் கொள்­ள­லாம்.