செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
d73a1110-17c9-402b-a7d4-25a8c329fcd3
-

பிஎஸ்பிக்கு எதிராக வழக்கு

கட்­சி­யி­லி­ருந்து தம்மை நீக்­கி­ய­தற்கு எதி­ராக சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சி (பிஎஸ்பி) மீது அதன் முன்­னாள்

வேட்­பா­ளர் வழக்­குத் தொடுத்துள்­ளார். டான் செங் போக்

தோற்­று­வித்த அக்­கட்சி சார்­பில் கடந்த நாடா­ளு­மன்­றத்

தேர்­த­லில் நீ சூன் குழுத்­தொ­கு­தி­யில் கலா மாணிக்­கம், 54, போட்­டி­யிட்­டார். தற்­போது அவர் நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­துள்ள வழக்கில் 2020 டிசம்­ப­ரில் தம்­மைக் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கி­யது தவறு என கட்சி அறி­விக்கவேண்­டும் என கோரி­யுள்­ளார். அத்­து­டன் தேர்­தல் செல­வுக்­கா­கத் தாம் அளித்த $10,000ஐ பிஎஸ்பி திருப்­பித் தர­வேண்­டும் என்­றும் கேட்­டுள்­ளார்.

கொவிட்-19 பொய்க்கு அபராதம்

பொது இடத்தில் எச்சில் துப்பியதற்காகப் பிடிபட்ட போ லியாங் சாய், 43, எனப்படும் ஆடவரை துணை போலிஸ் படை அதிகாரி ஈஸ்வரன் கிருஷ்ணன் கையும் களவுமாகப் பிடித்தார். ஆனால், தம்மைப் பற்றிய விவரங்களை போ தர மறுத்ததுடன் தமக்கு கொவிட்-19 தொற்று இருப்பதாக அதிகாரியிடம் பொய் கூறினார். அவர் ஒத்துழைக்க மறுத்த தால் போலிசை வரவழைத்தார் ஈஸ்வரன். கடந்த ஜூலை 3ல் இச்சம்பவம் நிகழ்ந்தது. பொதுச் சேவை ஊழியரைத் தொல்லை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து போவுக்கு நேற்று நீதிமன்றத்தில் $1,500 அபரா தம் விதிக்கப்பட்டது.