தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இவையெல்லாம் செய்து கழிவறையைத் தூய்மையாக வைத்திருக்க வலியுறுத்து

1 mins read
ff110a18-4250-4f62-a471-c8df54ba6b2c
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பொதுக் கழிவறைகளைச் சுத்தமாக வைத்திருக்க பொதுமக்களை ஊக்கமூட்டும் வகையில், 10 காப்பிக்கடை கழிவறைகள், வீட்டில் உள்ள கழிவறைகளைப் போலவே அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன.

சுவரொட்டிகள், தடுப்புச்சுவர் அலங்காரம், ஒட்டுத்தாட்களுடன் அவை அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன.

உலக கழிவறை தினத்தை ஒட்டி, பொது சுகாதார மன்றத்தின் பொதுக் கழிவறை துப்புரவு இயக்கம் இன்று தொடங்கியது.

கழிவறை தடுப்புச் சுவர்கள், கழிவறை கற்கள் பதித்த தோற்றத்துடன், சிறுசிறு செடிகளை வைப்பதற்கான தாங்கிகளுடன் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றை பார்த்ததுமே வீட்டுக் கழிவறையைப் போன்ற எண்ணம் வரும்.

தங்களுடைய வீட்டில் இருக்கும் கழிவறையைப் போலவே பொதுக் கழிவறைகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற உணர்வு பொதுமக்கள் மனதில் நன்கு நிலைபெற இது உதவும்.